பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூலைத் தேர்ந்தெடுத்தல். அச்சீடு, வெளியீடு, விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சி ஆகியன குறித்துப் பதிப்பாசிரி யர்க்கும் பொருளாளர்க்கும் அறிவுரைகூறுதலும் அறி வுரைக்குழுவின் பொறுப்புக்கள் ஆகும், பதிப்பாசிரியர் : பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பு, நூல் வெளியீடு, விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சிக்குரிய வினைப்பாடுகளைத் தொண்டு கருதியும் ஊதியமின்றியும் அறிவுரைக் குழுவின் அறிவுரையுடனும் ஆற்றும் பொறுப் புடையாரே பதிப்பாசிரியர் ஆவார். பாவாணர் பதிப்பகத் தின் முதற்பதிப்பாசிரியராகத் திரு. கு. பூங்காவனம் செயல்படுவார். பதிப்பாசிரியர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராகக்காணப்படினும் தக்கார் வேறொருவரை அறி வுரைக் குழுவினர் அமர்த்துவர். பொருளாளர் : பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பின் வழியாகப் பொருள் திரட்டலும் வைப்பகத்தில் இடுதலும், பதிப்பக வரவு செலவை எழுதிப்பேணலும் பொருளாளர் பொறுப்புக்கள் ஆகும். பதிப்பகத்தின் பெயரால் தொடங்கப் பெறும் வைப்பகக் கணக்கை ( Bank a/c) ஆளும் உரிமை இவர்க்குண்டு. பதிப்பகத்தின் முதற் பொருளாளராகத் திரு தமோதரன் அமர்த்தப் பெற்றுள்ளார். பொருளாளர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராய்க்காணப்படினும், வேறொரு பொருளாளரை அறிவுரைக் குழுவின் அறிவுரையுடன் பதிப்பாசிரியர் அமர்த்திக் கொள்ளாம்.