பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புரவலர் : தமிழ்த் தொண்டு கருதியும், பாவாணர் கொள்கைப் பரப்புக் கருதியும் பாவாணர் பதிப்பகத்திற்கு உருபா 1000-00 நன்கொடை வழங்குவார் அவ்வமைப் பின் புரவலர் ஆவர். பதிப்பகம் வெளியிடும் நூல்களில் இரண்டு படிகள் புரவலருக்குக் கையுறையாக அனுப்பப் பெறும், பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்துப் புரவலர் கூறும் கருத்துக்கள் முன்னுரிமையுடன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெறும். உறுப்பினர் : பதிப்பகத்தின் நூல் வெளியீட்டிற்கான முதல் வைப்பிற்குக் குறைந்த அளவில் உருபா நூறு நன்கொடையாய் வழங்குவோர் பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினராகப் பதிவு செய்யப் பெறுவர். வணிகமும், ஊதியமும், கருதாத் தமிழ்த் தொண்டாதலின் உறுப்பினர்க்கு வட்டித் தொகையோ ஊதியப் பங்கோ , அளிக்கப்பட மாட்டாது. ஆயின், அச்சாகும் நூலில் ஒருபடி அன்பளிப்பாக வழங்கப்பெறும். ஆண்டு - தோறும் வரவு செலவு அறிக்கையும் உறுப்பினர்க்கு அனுப்பிவைக்கப் பெறும். பதிப்பகத்தின் வளர்ச்சி குறித்து உறுப்பினர் தம் கருத்துக்களைப் பதிப்பாசிரி யருக்கோ அறிவுரைக் குழுவினருக்கோ தெரிவிக்கலாம். விற்பனைக் குழு : தமிழகத்தின் மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பின்கண்ட அக்குத்து (நிபந்தனை) களுக்கு உட்படும் விற்பனைக்குழு உறுப்பினர் அமர்த்தப் பெறலாம். 1. விற்பனைக் குழு உறுப்பினர் பாவாணர் பதிப்பகத் தின் உறுப்பினராயிருத்தல் வேண்டும். 2. வெளியாகும் நூல்களில் குறைந்த அளவில் 50 படிகளை விற்பனை செய்தல் வேண்டும்.