பக்கம்:எழில் விருத்தம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மணிக்கூண்டு

இருளினைப் போர்த்த வானில்
   எழுமதி விண்மீன் கூட்டம்
அரும்பொழு(து) உணர்த்தும் என்றே
   அறிவிப்பர்; முகில்கள் சூழ்ந்தால்
பெருமணிக் கூண்டே காலப்
   பிச்சையை நாட்டுக் கென்றும்
தருபவர் உன்னை யன்றி
   யாரெனச் சாற்றக் கேளே! ..............................3

காற்றினில் மழையில் வானக்
   காரிடி வீச்சில் கோடை
ஆற்றொணா வெயிலில் நின்றே
   அவரிவர் எனப்பா ராது
மாற்றார்க்கும் காலங் காட்டும்
   மணிக்கூண்டே ! உன்னைப் போல
நூற்றிலே ஒருவ ரேனும் -
   மக்களில் நுவலப் போமோ? ..........................4

இருண்டவர்க்(கு) அறிவை ஊட்ட
   எவருளார்? ஆன்ற கல்வித்
தெருண்டவர் போல நாளும்
   திசையில் வாழ் மக்கட் கெல்லாம்,
பேசினால் கூண்டே! ஒசைப்
   பேச்சினால் கடந்த காலம்
வருவதே யில்லை என்ற
   வாக்கினை உணர்த்து கின்றாய்! ........................5