பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயே! என்னைக் கடன்காரன் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்?” என்பது பாரதி தமது தினசரிக் குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகம் (பாரதி வ்சனம் : சித்தக்கட்டல்). மேலும் எங்ஙனம் சென் றிருந்தீர்? எனத் தொடங்கும் கலை மகழே வேண்டுதல், கவிதைக் காதலி' முதலிய பாரதியின் கவிதைகள் “நமக்குத் தொழில் கவிதை" என்று முழங்கிய அந்த நாவலரின் படைப்புத் தொழில், வறுமையின் காரணமாக எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை விளக்கும் சான் றுகளாகும். எனவே தாகூரைப் போல் இடையருது எழுதிக் குவிக்கக்கூடிய சூழ் நிலையில் பாரதி வாழவில்லை என்பது தெளிவு. நெருப்புக்கு மத்தியில் அமர்ந்த அரிகண்டம், எமகண்டம் பாடுவது போல், வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து, அந்த நெருப்பில் உருகில் கரைந்து விடாமல் மேலும் மேலும் புதம் பெற்ற' உருக்காகக் சுனிந்தவராய், இவ்வளவு கவிதைகளைப் பாரதி எழுதி வைத்துச் சென்றதே பெரிய சாதனைதான், பாரதி தமிழ் வாழ்க்கை பின் இறுதிக் காலம் வரையிலும் வறுமையோடு போராடியவர். அதனால் உடல் நலிந்ததோடு மட்டு மல்லாமல், சமயங்களில் உள்ளமும் சலித்து நொடித்தவர், ஆனால் தாகூரோ வறுனமயின் கொடுமையை வாழ்க்கையில் நேரடியாக அனுபவியாத பாக்கியசாகம் ; அன்ன விசாரம் அற்ற அதிருஷ்டசாலி. அவருக்கும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதுண்டு. தாம் தொடங்கிய சாந்தி நிகேதன் ஸ்தாபனத்துக்குப் பண நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் . அவர் வீதியில் இறங்கி, நிதி - 532ல் செய்தார் எனவும், அதற்காக வெளிநாடு சென்றாரெனவும் அறிகிறோம். எனினும் அரிசிக்கும் உப்புக்கும் ஆலாய்ப் பறந்து நெஞ்சுருகி நிற்க வேண்டிய நிலை தாகூருக்கு என்றும் நேரவில்லை ; நேர்வதற்கான சூழ்நிலையும் இல்லை.. - காலஞ்சென்ற சிறந்த எழுத்தாளர் ஹுமாயூன் கபீர் சொல்வதுபோல், “* தாம் பிறந்த இடம், காலம் இரண்டிலும் அவர் என் வெகும் உப்பு நிலை தான் இல்லை.