பக்கம்:கடல் முத்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கடல் முத்து

 தும் எம்மா சந்தோசப் பட்டுப்பூட்டேன் தெரியுமா? ஆனா, அதே சுருக்கிலே நீங்க கீழே விழுவிங்கன்னு கனாக்கூடக் காணல்லே. இதுமட்டும் உயிரு தப்பிச்சது புண்ணியந்தான்——’ கூறின பவளக்கொடியின் தேறுதல் அவனை ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் பழைய கதை. .

‘பவளக்கொடி, பவளக்கொடி——′ சுய நினைவு பெற்ற பவளக்கொடி அலறியடித்துக்கொண்டு வந்த தன் அன்னையைக் கண்டதும் ‘என்னவோ ஏதோ’வென்று பதைத்துவிட்டாள்.

‘தங்கச்சி, ஒன் மச்சான் காட்டுக் காய்ச்சலிலே செத்துப்போயி நாலைஞ்சு நாளாயிடுச்சாமே′ என்று ஓலமிட்டாள் செல்வி.

‘மச்சான் எப்போது வரும்’ என்று நாட்களை யுகங்களாகக் கழித்து வந்த பவளக்கொடி இந்த எதிர்பாராத இடியைக் கேட்டதும் மனமிடிந்தாள்: பித்துப் பிடித்தவள் கணக்கில் அலறினாள். அடுத்த தருணம் அவளை ஆறுதல் படுத்த வந்த அவள் ‘ஆயா’விடம் அவளுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. எரிச்சல் மூண்டது. தீயின்றிப் புகையா?

நடேசனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் தீர்மானத்தை ஒரு நாள் பேச்சு வாக்கில் தன் தாயிடம் பவளக்கொடி எடுத்துரைத்தாள்.

‘தங்கச்சி, நடேசனை நீ கட்டிக்கிறதுக்கு அட்டியில்லை. ஆனா அதுகிட்டே பேருக்குக்கூட நாலு காசு பணம் கிடையாதாமே. நம்ப பலகாரக் கடை மிச்சத்திலே எப்படி மூணு வயிறு நிரப்ப ஏலும்? நீ ரோசனை செஞ்சுக்க, பவளம்.′

சொல்லாமல் சொல்லிய கிழவியின் பேச்சு நடேசனுக்கு எட்டியது.

‘பவளக்கொடி, எண்ணி ஒரு வருசத்துக்குள்ளே எப்பாடு பட்டும் கையிலே நாலு பத்துச் சேர்ந்திடும். கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/13&oldid=1181134" இலிருந்து மீள்விக்கப்பட்டது