பக்கம்:கடல் முத்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தங்கச்சி
15

 ‘தங்கச்சி, சின்னப்பாட்டு ஒண்ணு.

‘பாட்டா? ஏது ஒருமாதிரியா இருக்கீங்களே, இன்னிக்கு?′

‘ஆமாம், வள்ளி...′

பிச்சைக்காரப் பெண் பாடினாள். பாட்டு முடிந்ததும், ‘ஏதேது? தெம்மாங்கு கூடத் தெரியுதே’ என்றான் கேலியாக.

அவள் சிரித்தாள், அவனுக்கும் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. பின் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

இவ்வித இன்பநிலையில், அண்ணனும் தங்கையும் எவ்வளவு நேரம் இருந்தார்களோ?

வன் பெயர் செல்லையா. களையான தோற்றம். ஆனாலும் நொண்டி. ஊன்றுகோலின்றி அவனால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

வள்ளி! இதுதான் அந்தப் பெண்ணின் பெயர். வறுமையில் பிறந்த உயிர். ஆனால், அதே வறுமை அவளது அழகிற்குத் திரையிடவில்லை.

ஜனசந்தடி அதிகமுள்ள கடைத்தெருப் பக்கங்களில் தான் அவர்கள் நடமாடுவார்கள். அங்குதானே ஏதாவது நாலு காசு வரும்படி கிடைக்கும்? வள்ளி, காதில் விழுந்து அனுபவப்பட்டிருந்த சினிமாப் பாட்டுக்களைப் பாடுவாள். அதற்கு ஏற்றாப்போல அவன் குழல் ஊதுவான். கான வெள்ளத்தில் கவர்ந்திழுக்கப்படும் ஜனங்கள் அவர்களைச் சுற்றிக் கூடிவிடுவார்கள். பிள்ளைப் பேற்றின் பெருமை உணர்ந்த புண்ணியவான்கள் கையில் இருப்பதை மறைக்காமல் அவர்கள் ஏந்தி நிற்கும் தட்டில் வீசி, வந்த வழியே செல்வார்கள். உடனே அந்த ஏழை உள்ளங்கள் மலர்ந்து விடும்.

இரவு நேரங்களில்தான் அவர்களுக்கு ஒய்வு கிடைக்கும். அப்பொழுது அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ளும் பேச்சில் அகப்படாத விஷயமே பாக்கி இராது. வேடிக்கையாக வள்ளி ஏதாவது பேசினால், அப்படியே கதைபோலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/24&oldid=1188077" இலிருந்து மீள்விக்கப்பட்டது