பக்கம்:கடல் முத்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழப் பிறந்தவள் நடுச்சாமம். இரவு ஊர்ந்துகொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத் தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை ஒன்றில் கருத்தை மையமிட்டுப் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் சேகரன். 'டாக்டர் ஐயா.” டாக்டர்-எசமான் ஒன்றியிருந்த உள்ளத்தைத் திருப்பிவிட்டுக் குரல் குறுக்கிட்ட திசைக்குத் திருஷ்டியைத் திருப்பினர். வாசல் கதவு படீர் படீ'ரென்று ஒசை ஒலமிடத் தட்டும் சப்தம் காதைத் துளைத்தது: ஒடிப்போய்த் திறந்தார். மூச்சுப்பிடிக்க ஓடிவந்து அறையில் விழுந்த கண்ணுச் சாமியைக் கண்டதும் டாக்டருக்குத் திகைப்பு வளர்ந்தது.

  • கண்ணுச்சாமி.

எசமான், காஞ்சனை எங்கேயோ மறைஞ்சுப் போயிட் டாளே." காஞ்சனை!சேகரனுக்குப் பகீரென்றது. மனத்திரையில் புனையா ஓவியமெனத் தீட்டப்பட்டிருந்த அவள் எழில் பிம்பம் இமைப்போதில் அவர் கண்முன் நிழல் வடிவிட்டது. விழிகள் கண்ணிit கூட்டின. - - *- என்ன. காஞ்சன மறைந்துவிட்டாளா? அதுவும் இந்த அகாலவேளையில்-குமையும் இருள் வீச்சிலே-? :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/32&oldid=765003" இலிருந்து மீள்விக்கப்பட்டது