பக்கம்:கடல் முத்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கடல் முத்து ஐயையோ, என் அருமை மகள் எங்கே போனுளோ தெரியலேயே. எப்பவும் போலத்தான் தூங்கிக்கிட்டிருந் துச்சு. என்னமோ லேசாச் சத்தம் கேட்டது. விழிச்சுக் கிட்ட நான், 'யார் அது’ என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதிலே வல்லை. மனசு சந்தேகப்பட்டது. விளக்கைத் துTண்டிக் காஞ்சனே படுத்திருந்த இடத்தைப் பார்த்தேன். அந்த இடம் சும்மா காலியாயிருந்துச்சு. என் உயிரே போயிடுச்சு எசமான்." - - - - துயரம் சுருதி சேர்க்க விக்கலுடன் நடந்ததைச் சொன் ஞன் கண்ணுச்சாமி. - காஞ்சனை இப்படித் திடுதிப்பென்னு மறைய என்ன தான் காரணம்? பெண் இதயம் பேதலிக்கப் பிழைபட ஏதாகிலும் சொன்னயா?* மனம் கற்பித்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கேள்வியை உதிர்த்துவிட்டார் டாக்டர், கண் ணுச்சாமியிடம். - ஆகுல் கேட்ட கேள்வி அவனைச் சுட்டுவிட்டதோ என் ன்வோ, பாவம்! பச்சைக் குழந்தைபோல அவன் விசித்து அழ ஆரம்பித்தான். எசமான், 'அது' பிறந்த நாளிலிருந்து முகம் கண்ட இதுவரை ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லிங்க." ஒருவேளை ரயிலடிப்பக்கம் போயிருக்கலாம்; ஏனென் முல், இன்னும் அரைமணி நேரத்தில் வடக்கே ஒரு ரயில் இருக்கிறது. எதற்கும் பதட்டப்படாமல் வா, போய்ப் பார்க்கலாம்.” . எங்கும் மோனம்! ரயிலடிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் இரு வரும் வழியில் குறுக்கிட்ட ஆற்றுப் பாலத்தை அணுகும் போது, இருளில் ஒரு புள்ளியென வெள்ளை உருவமொன்று முன்செல்வது புலயிைற்று. மறு விடிை_தொபேலென்று பெருத்த ஓசை ஒலம் எழுப்பி அமைதியைக் கலைத்தக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/33&oldid=765004" இலிருந்து மீள்விக்கப்பட்டது