பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99



ஏற்றத்தைப் போல ஏறி
இறங்கிடும் என்றன் மூச்சுக்
காற்றுள்ள வரையில் சற்றும்
கண்துஞ்சல் இன்றி, நாட்டார்
போற்றிடும் தொண்ட னாவேன்.
புகழுக்கும் நம்பிக் கைக்கும்
ஆற்றிடும் அன்பி னுக்கும்
அருகனாய் நடந்து கொள்வேன்.


வெள்ளையர் ஆட்சி வீழ
வீரத்தைக் காட்டி நின்ற
துள்ளுதோள மறவ ருக்கும்,
தோள்கொடுத் தாட்சித் தேரைத்
தள்ளிடும் நண்ப ருக்கும்
தாங்கரும் மகிழ்ச்சி யோடென்
உள்ளத்தில் பொங்கும் நன்றி
உணர்ச்சியை வழங்கு கின்றேன்.


கற்றரைச் சிறைக்கூடத்தில்
கடுந்துயர் மிகவும் பட்டும்
ஒற்றிய பிரம்ப டிக்கே
உடம்பினைத் தந்து நைந்தும்
பற்பல பேரைக் குண்டுப்
பாம்புக்குப் பறிகொ டுத்தும்
பெற்றஇச் சுதந்த ரத்தைப்
பேணுதல் கடமை யாகும்.