பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flux reversal 192 font page



வகத்தை துடைத்தெடுக்க வேண்டும் - மீண்டும் நிரப்புவதற்காக. இது போலவே விசைப்பலகையில் உள்ளீடு பெறும் விவரங்களை நுண் செயலி அல்லது வேறு உறுப்புகள் படிக்குமுன் அவை இடைநிலை நினைவகத்தில் தங்கியிருப்பதுண்டு. அவற்றையும் துடைத்தெடுத்துப் படிக்கப்படவேண்டும்.

flux reversal : காந்தப்புல திசை மாற்றம் : காந்தவட்டில் அல்லது காந்த நாடாவின் மேற்பரப்பில் உள்ள மிக நுணுக்கமான காந்தத் துகள்களின் திசையமைப்பில் ஏற் படும் மாற்றம். இரும இலக்கங்கள் 0, 1 ஆகியவை இருவேறு காந்தப்புல திசையினால் குறிப்பிடப்படுகின்றன. காந்தப்புல திசைமாற்றம் இரும 1-என்ற இலக்கத்தைக் குறிக்கின்றது. இரும 0-வைக் குறிக்க திசைமாற்றக் குறியீடு எதுவும் இல்லை.

focus : முன்னிறுத்து

folder options :கோப்புறை விருப்பத் தேர்வுகள்.

folders : கோப்புறைகள்.

follow up மறுமொழி, பதிலுரை: தொடர் நடவடிக்கை : செய்திக் குழு வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டு ரைக்குப் பதிலுரை. மூலக் கட்டுரை யில் இருக்கும் பொருளடக்க {Subject) வரியே பதிலுரையிலும் இருக்கும். Re என்பது முன்னொட் டாக இருக்கும். ஒரு கட்டுரையும் அதற்கான பதிலுரைகளும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக் கும். பயனாளர் செய்தி படிக்கும் நிரல்மூலம் அனைத்தையும் வரிசை யாகப் படிக்க முடியும்.

font class எழுத்துரு வகை; எழுத்துரு இனக்குழு.

font family property : எழுத்துரு குடும்பப் பண்பு.

Font/DA Mover : ஃபாண்ட்/டி மூவர்: பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக் கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல்.


font number :எழுத்துரு எண் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக் கொண்டும் மற்றும் அவற்றின் எண்களைக் கொண்டும் அடையாளம் காணப் படுகின்றன. ஒர் எழுத்துரு கணினி யில் நிறுவப்படும்போது அதே எண்ணில் ஏற்கெனவே ஒர் எழுத்துரு நிறுவப்பட்டிருக்கிறது எனில், புதிய எழுத்துருவின் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும்.

font size : எழுத்துரு அளவு : ஒர் எழுத்துருவின் உருவளவு. பெரும் பாலும் புள்ளிக் (point) கணக்கில் குறிக்கப்படுகிறது. ஒர் அங்குலம் 72 புள்ளிகளாகும்.

fontsize property : எழுத்துரு அளவு பண்பு.

font page : எழுத்துருப் பக்கம் : ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவைக் ஒளிக்காட்சி 6) (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக் காட்சி நினைவகத்தின் (Video Memory) ஒரு பகுதி, நிரலர் தன் விருப்பப்படி வடிவமைத்த எழுத் துருவின் வரையறுப்பு அட்ட