பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

font style property 193 FOR loop


வணையை (எழுத்து வடிவங்களின் தொகுப்பு), இந்த நினைவகப் பகுதி யில்தான் இருத்திவைக்க வேண்டும்.

font style property: எழுத்துரு பாணிப் பண்பு.

font suitcase : எழுத்துருக் கைப்பெட்டி : மெக்கின்டோஷ் கணினி களில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்பு களில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ என்ற எழுத்துடன் காட்சியளிக் கும். பதிப்பு 7.0 விலிருந்து இந்தச் சின்னம் தனிப்பட்ட ஒர் எழுத் துருவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

font type : எழுத்துரு வகை.

too : ஃபூ : நிரல்கள் ஒரு குறிப் பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிகள், செயல்கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்கள் ஆகிய வற்றைக் குறிக்க, நிரலர்கள் பொது வாக ஃபூ என்ற சொல்லையே பயன்படுத்துவர்.

fore casting : முன்கணித்தல்

foreground job : முன்புல வேலை; முன்னணி வேலை.

foreground task : முன்பும் பணி . fork1: கிளை மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அடையாளம் காணப் பயன்படும் இரு பகுதிகளில் ஒன்று. ஒரு மெக்கின்டோஷ் கோப்பு, தகவல் கிளை (data tork), வளக் கிளை (resource fork) இரண்டையும் கொண் டிருக்கும். பயனாளர் உருவாக்கும் பெரும்பாலான அல்லது அனைத்துக் கோப்புகளும் தகவல் கிளையில் இருக்கும். வளக் கிளை பெரும் பாலும் பயன்பாட்டு நோக்கிலான தகவல்களை அதாவது எழுத்துருக் கள், உரையாடல் பெட்டிகள் மற்றும் பட்டிகளைக் கொண்டிருக்கும்.

fork2: கிளை : பல்பணி இயக்க முறைமையில் ஒரு தாய் செய லாக்கம் தொடங்கிய பிறகு ஒரு சேய் செயலாக்கத்தைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

FOR loop : ஃபார் மடக்கி : ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யவைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறு படுகிறது. பெரும்பாலான மொழி களில் ஒரு சுட்டுமாறியின் மதிப்பு குறிப்பிட்ட எல்லைக்குள் தொடர் மதிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். (எ-டு) பேசிக் மொழி:

FOR | = 1 TO 100

PRINT |

NEXT | பாஸ்கல் மொழி: FOR I: = 1 TO 10 DO

WRITELN (I); சி.மொழி: for {i=0; i<10; i++)

print ("%d ", );

சி. மொழியில் ஃபார் மடக்கியை இந்த வரையறைக்கு அப்பாலும் பல்வேறுபட்ட வடிவங்களில் பயன் படுத்த முடியும்.