பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315


மகோதரன் வீழ்ந்ததைக் கண்டான் இராவணன், கோபாவேசமாக இராமனைத் தாக்கி பொருதான்.

***


‘பனிப் படா, நின்றது என்னப்
        பரக்கின்ற சேனை பாறிக்
தனிப்படான் ஆகின் இன்னம்
        தாழ்கிலன்’ என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன்,
        அவன் ஒன்றும் நோக்காவண்ணம்
குனிப் படா நின்ற வில்லால்,
        ஒல்லையின் நூறிக் கொன்றான்.

பணியானது ஒழிகின்றதுபோலப் பரந்துள்ள இந்த அரக்கச் சேனை சிதறிப் போனால் அன்றி அரக்கர்கோன் தாழ்ந்து வரமாட்டான். எனவே அவன் வணங்கி வர வேண்டுமென்றால் அரக்கர் சேனை முற்றிலும் ஒழிய வேண்டும்; என்று ஆராய்ந்துணர்ந்த வீரனான இராமன், விரைவிலே அரக்கச் சேனையைத் தவிடு பொடியாக்கினான்.

***

(அப்பொழுது இராமபிரான் தன் உள்ளத்தில்). பனி படா நின்றது என்ன - (மூடு) பனி உண்டாகி நின்றது என்று சொல்லுமாறு; பரக்கின்ற - விரிந்திருக்கிற; சேனை - (தன்) சேனைகள்; பாறி- சிதறி; (தான்) தனிப்படான் ஆகின் - தான் மட்டும் தனியாக ஆகாத வகையில்; இன்னம் தாழ்கிலன் - (இவ்விராவணன்) இன்னும் தாழ மாட்டான்; என்னும் தன்மை - என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன் - நன்றாக எண்ணியறிந்த வீரனான இராமபிரான்; அவன் ஒன்றும் நோக்காவண்ணம் - (தன் செயல்) ஒன்றையும் அவன் கண்டு அறியாதபடி; குனிப்படா நின்ற வில்லால் –