பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

(தன்) வளைந்த வில்லால்; ஒல்லையில் - விரைவில்; (அச்சேனைகளை) நூறிக் கொன்றான் - பொடியாக்கிக் கொன்றான்.

***

இதே தருணத்தில் இராவணனுக்கு என்ன நேர்ந்தது?

***


அடல் வலி அரக்கற்கு அப்போழ்து,
        அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால்
        கிளர்ந்து உடற்றும் காலை,
வடவரை முதல ஆனமலைக்
        குலம் சலிப்ப மானச்,
சுடர் மணி வலயம் சித்தத் துடித்தன,
        இடத்த பொன் - தோள்.

இராமனின் கணைகள் வரும்போது, இராவணனுக்குத் தீயநிமித்தங்கள் தோன்றலாயின. பெருவலிமை படைத்த இராவணனுடைய இடது பக்கத்தின் பத்து தோள்களும், மணிகளழுத்திய தோள்வளை சிந்தும்படி துடித்தன; இதைத் தவிர, வானின்று இரத்த மழை பெய்தது. பெருமலைகள் இடியால் பொடிப் பொடியாகின. குதிரைகள் பின்வாங்கின; விற்கள் நாண் இடையே அறுத்துவிட்டன. இராவணனுக்கு நாவும் வாயும் உலர்ந்திட்டன; அவன் அணிந்த நறுமலர் மாலையோ புலால் நாற்றம் வீசியது.

***

அப்போழ்து - அச்சமயத்தில்; அடல் வலி அரக்கற்கு - மிக்க வலிமையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த - அண்டங்கள் யாவும் தாழவும்: மண்டும் கடல்களும் - பொங்கும் கடல்களும்; வற்ற - நீரில்லாமற்-