பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - - 99 கேடு என்ன? இராமன் வீரத்தன்மைக்கு இழுக்கு என்று அறிந்து கொள்ளுங்கள். வீரமனம் முழுதும் உடைய இராவணனோடு போரிட்டான் என்றாகாது, ஒரு காமுகனோடு போரிட்டான் என்றே படும். போரிட்ட நெஞ்சம் பற்றியே பேச்சு. இராமன் முன் இராவணனைப்போர்க்களத்து நிறுத்தும்போது தூய வீரனாக நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் சீதையெண்ணம் இராவணனுக்கு ஒடிய நேரத்தில், வீரவுணர்வு விலகிய நேரத்தில், இராமன் அம்பு எறிந்து கொன்றான் என்று சொல்லலாமன்றோ! வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க மனமடங்க வினையம் வீயத் தெம்மடங்கப் பொருதடக்கைக் செயலடங்க மயலடங்க ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலையடங்க நிலையடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தனவம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா. с இராவணன் மாண்டபின் இவ்வாறு பாடப்பெறும் கவிக் கூற்றுக்களாலும், வீடணன் துணிவு பிறந்து இராமனுக்கு முன் அண்ணனைப் பாராட்டும் வீர விளக்கத்தாலும் இராவணன் பெருமை அறியப்படும். முழு வீர் இராவணனைக் கொன்றான் என்றாற்றானே வாகை சூடிய சிலை இராமன் தோள்வலியின் சிறப்பு சிறப்பாகத் தோன்றும். ஆதலின் மண்டோதரிக் களம் இராம இராவணப் போர்க்களத்தை உண்மையான வீரக்களம் ஆக்கியது. வேட்டன வேட்டோர்க் கெல்லாம் ஆசற நல்கி ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவதானான் என்பர் கம்பர். 'ஒல்காப் போர்த் தொழில் என்பதற்கு வீரங்குறையாத போர்த்தொழில் என்பது பொருள். இதனால் இராமன் வெற்றி தூயதாகின்றது. - காப்பியத் தூய்மை இராமன் வெற்றித் தூய்மையைக் காட்டிலும் இன்னொரு பெருந்துய்மை உண்டு. ஒருவன் இறக்குங்காலத்து எண்ணியிருந்த எண்ணம் எதுவோ அதனை மறு பிறப்பில் எய்துவான் என்பது ஒரு சமயக் கோட்பாடு. 'புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் என நாவுக்கரசரும், 'எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கே ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' எனப் பெரியாழ்வாரும் கடவுளை வேண்டுதல் காண்க. உயிரோடு வேவேன் உணர்வொழி காலத்து - வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய