பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - ുli எல்லா வகையாலும் இராமனே தலையானவன் என்ற நல்லொளி இலங்கையனுக்கு உதயமாயிற்று. தன்னை இகழ்ந்துரைக்கும் மாலியவானிடம் வெளிப்பட்ட சொற்களால் இராவணன் உடன்படுகின்றான். போயினித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போலும் வேயெனத்தகைய தோளி இராகவன் மேனி நோக்கித் தீயெனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால் நாயெனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம். வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழுவாள் அங்கை ஈசன்என்றினைய தன்மை இளிவரும் இவராலன்றி நாசம்வந் துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன் பூசல்வண் டுறையுந் தாராய் இதுவிங்குப் புகுந்த தென்றான். முக்கோடி வாழ்நாளும் பெருந் தவமும் வெற்றி வரமும் யானை மருப்பும் உடைய இராவண வேந்தன் முதற் காட்சியிலேயே, நாயெனத் தன்னை இழிவுபடுத்திக் கொண்டான் என்றால் நல்ல பகையால் நான் அழியும் பேறுபெற்றேன் என்று உவந்தான் என்றால், இராமன் சிறப்பை இராவணன் உணர்ந்தது போல் வேறு யாரும் உணரவில்லை, உணரவும் முடியாது என்பது பெறப்படும். 'இவனோதான் வேத முதற் காரணன் என்பது இராவணன் இறுதிப் போரில் பெற்ற ஞானம். - காப்பியத்துக்குத் தன்னேரில்லாத் தலைவன் ஒருவன் வேண்டும் எனவும், அத்தலைவன் எல்லாவகை மாந்தராலும் போற்றப்படவேண்டும் எனவும், இராமனே இராமகாதைத் தலைவன் எனவும், பகையுலகில் தலைவனான இராவணனும் இராமன் தலைமைப் பண்மை மதித்தான் எனவும் வேண்டிய அளவு விளக்கத்தோடு மொழிந்தேன். இராமன் தலைமைக்கும் நேர்மைத் தலைப்புக்கும் என்ன இயைபு என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.