பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 109 அரக்கினத்தாரும் இராமனைப் பாராட்டவில்லையென்றால், பாராட்டும் நிலைக்கு இராமன் பண்பு உயரவில்லை யென்றால், இராமாயணத்தில், இராமன் தலைமை நிறையுடையதாகுமா? வீடணன் இராமனைப் பாராட்டுவது உண்மையே. இப்பாராட்டில் எப்படியும் ஒரளவு தன்னலம் புகுந்துள்ளது. வாலிவிண் பெறவர சிளைய வன்பெறக் கோலிய வரிசிலை வலியும் கொற்றமும் சீலமும் உணர்ந்து நிற்சேர்ந்து தெள்ளிதின் மேலர செய்துவான் விரும்பி மேயினான், என்று வரும் அநுமன் வாக்கே சான்று. ஆதலின் அடைக்கலம் புக்க வீடணன் இராமன் தலைமைக்குப் பணிந்தான் என்பது எடுத்துக்காட்டாகாது. இராமன் இப் பெருங்காப்பியத்துத் தன்னேரில்லாத் தலைவன் எனப் பெயர் பெற வேண்டும் எனின், இராவணன் பாராட்டுதலைப் பெற்றாக வேண்டும். இராமனை இராவணன் தனக்கு மேற்பட்ட தலைவனாக எண்ணாதவரை இராமன் தலைமை குறைபாடு உடையதே. சூர்ப்பனகையின் வருணனைத் திறந்தால் சீதையைக் காமுற்ற இராவணன் மாரீசனை அடைகின்றான்; வஞ்சகத்தால் வெளவிக்கொண்டு வருக என்று அவனை வேண்டுகின்றான். இச்செயல் இராவணன் வாழ்வுக்கு இறுதியாகும் எனவும், அரக்கர் குலத்தை அழிக்கும் எனவும், பிறன்மனை நயந்தவனை அறம் கொல்லும் எனவும் மாரீசன் எவ்வளவோ தடுத்துப் பார்க்கின்றான்; பயனில்லை. இராவணன் தீய எண்ணத்துக்குத் துணை நிற்பதல்லது மாரீசனுக்கு வழியில்லை. சீதையைக் கவர்ந்துவர ஒருவாறு அவன் இசையவே, இராவணன் சினம் தணிகின்றான். - குன்றெனக் குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் பொன்றலின் இராமன் அம்பாற் பொன்றலே புகழுண் டன்றோ, என இராமன் வீரத்தைத் தன்னை அறியாமலே இலங்கை வேந்தன் புலப்படுத்தக் காண்கின்றோம். இராமனோடு செய்த முதற்போரில் முடியிழந்தான்; வில் இழந்தான் இராவணன். நேருக்கு நேர் செய்த இப்பூசலில் இராமன் அழகையும் அருன்ளயும் ஆற்றலையும் காணும் தனி வாய்ப்பு இவனுக்குக் கிட்டடியது. பாம்பின் கால் பாம்பறியும் என்றபடி இராவணன் மூவுலக வீரன் ஆதலின் இராமன்தன் வீரத்தை முதற் போரிலேயே புரிந்து கொண்டான்.