பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i ()8 - - கம்பர் என்று இராமன் மறுத்து விட்டான். யார் வேண்டினும் வாய்மை பின்வாங்குதற்கு உரியதன்று என்று மேலும் உறுதி மொழிந்தான். இதனைக் கேட்டபின் வசிட்டனும் இராமன் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. - இராமன் பக்கத்தார் அவன் தலைமையை உடன்பட்டனர் என்பது இயல்பே. சுக்கிரீவன் குலத்தவர்கூட இராகவன் தலைமைக்கு இசைந்து நடந்தனர் என்பது வியப்பில்லை. அச்சத்தாலும் அன்பினாலும் அவன் தலைமைக்குக் கீழ்ப்படித்தான் சுக்கிரீவன். இராமாயணப் பாத்திரங்களுக்குள்ளே மாசற்ற அன்புப் பாத்திரம் அநுமன் ஆவன். குடுமித் தேவரைக் கண்டு உருகிய கண்ணப்பர் போல இராமனைக் கண்ட அநுமன் என்பு உருகினான். காதல் பெருகினான், அன்பு மிகுந்தான், அடியவன் ஆனான், வானர குலத்தில் வாலியும் தாரையும் அங்கதனுங் கூட இராமனைத் தலைவனாகப் போற்றினர். - பாலமை தவிர்நீ என்சொற் பற்றுதி யென்னின் ஐய மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால்தரை தோய நின்று கட்புலக் குற்ற தம்மா மால்தரு பிறவி நோய்க்கு மருந்தென வணங்கு மைந்த. இராமன் அம்பு பட்டுச் சாகும் வாலி இராமன் கண்கண்ட கடவுள் எனவும், பிறவிப்பிணி தீர்ப்பவன் எனவும் பொழிந்து அங்கத மைந்தனை வணங்கச் செய்கின்றான். சினத்தோடு கிட்கிந்தைக்கு வந்த இலக்குவனுக்கு முன் நின்று, வாலியைக் கொன்ற அம்பு உங்களிடத்து இருக்கும் போது வேறுதுணை வேண்டுமோ எனத் தாபதத் தாரை இராமனைப் பாராட்டுகின்றாள். மனித இனமும் குரங்கினமும் இராமபிரானைத் தலைவனாக எண்ணியது. நாம் எல்லாம் எதிர்பார்க்கக் கூடியதே. அயோத்தி மக்கள் அரசன் என்ற பாசத்தாலும் இலக்குவன் முதலியோர் அண்ணன் என்ற பாசத்தாலும், சுக்கிரீவன் முதலியோர் ஒரு வகையால் தன்னல வேட்கையாலும் இராமன் தலைமையை மதித்தனர். ஒரு காப்பியத்தலைவன் தன்னேரில்லாத் தலைவன் ஆக வேண்டும் எனின், பகைவரும் மதிக்கும் பண்புடையவனாக விளங்க வேண்டும். தன் இனத்துக்கும் தன் குடும்பத்துக்கும் தலைமை என்பது தன்னேரின்மை ஆகுமா இராவணனும்