பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை - 107 இராணவன், கும்பகருணன், வீடணன், இந்திரசித்து, மாரீசன், மாலியவான், சூர்ப்பனகை, திரிசடை, மண்டோதரி எனவும்; குகன், சடாயு எனவும், ஈடும் எடுப்பும் இல்லாப் பெரும் பாத்திரங்கள் இராமாயணத்து உள. இவ்வளவு பேரிலும் இராமனே தலைமையானவன். இத்தலைமையை எப்பக்கத்தாரும் ஒப்புக்கொள்ள வேண்டும். 'தன்னேரில்லாத் தலைவனை யுடைத்தாய்' என்பது சிறந்த காப்பிய இலக்கணம். பல பெரும் பூசல்களும் விளைவுகளும் நடக்கும் காப்பியத்துக்கு ஒரு தனித்தலைவன் இல்லாவிட்டால், இருக்குமாறு செய்யாவிட்டால், பற்றுக் கோடின்றிக் காப்பியம் தடுமாறும். பாத்திரங்களும் தறுதலைகளாகக் காட்டியளிக்குமே யன்றி, வாழ்க்கைக்கு உறுதலைகளாக இரா. சட்டியடுக்குப் போல அனைத்தையும் ஒன்றுள் ஒன்றாக அடுக்கிக் கொள்ளும் பெரும் பாத்திரம் வேண்டும். இப் பெரும் பாத்திரம், இராமாயணத்தில் இராமனே யாவன். இராமனை நினைந்து தயரதன் உயிர் விடுகின்றான். வேயுயர் கானம்தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான், என்றார் கம்பர். “கைகேசியின் வரங்கேட்டு ஊழித் தீ போலச்சினந்த இலக்குவனைப் பார்த்து , - தோன்றா நெறிவாழ் துண்ைத்தம்பியைப் போர்தொலைத்தோ சான்றோர் புகழும் தவத் தாதையை வாகை கொண்டோ ஈன்றாளை வென்றோ இனிஇக்கதம் தீர்வது, என்று இராமன் கடிந்துரைத்தான். அண்ணன் சொல்லுக்கு அடங்கிச் சினம் தீர்ந்தான் இலக்குவன். இராமனை மீண்டும் கொண்டு வந்து கோமுடி சூட்டுவது என்று துணிந்து, அனைவரையும் அழைத்துச். சென்ற பரதன் இராமனது திருவடித்தலம் இரண்டையும் பெற்று அழுத கண்ணோடு திரும்பினான்; நாட்டைப் பதினான்கு ஆண்டும் காத்தல் உன் கடன் என்ற இராமன் சொல்லைத் தலைமையாக ஏற்றான். 'உனக்கு வித்தைகள் கற்பித்த ஆசிரியன் நான். என் கட்டளையை மறுக்காது, திரும்பிச் சென்று நாடு ஆள்க' என்று வசிட்ட முனிவன் வற்புறுத்திக் கூறியபோது, - - சான்றவராகதன் குரவ ராகதாய் போன்றவராகமெய்ப் புதல்வராகதான் தேன்றரு மலருளான் சிறுவ செய்வதென்று ஏன்றபின் அவ்வுரை மறுக்கும் ஈட்டதோ,