பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - கம்பர் இராமாயணத்து முன்படம் போடுவார் பரதனையும் சேர்த்து நால்வரையும் போடுவார்களாக காண்டந்தோறும் வரும் இலக்குவன் நீர்மேல் நீள நீந்திச் செல்பவனை ஒப்பவன். அயோத்தியா காண்டத்தோடு நின்று இடைக் காண்டங்களில் மறைந்து உயுத்த காண்டக் கடைசியில் மீண்டும் தலையெடுக்கும் பரதன் ஒரிடத்து நீர்மூழ்கி உள்ளே நீந்திப்பின் ஓரிடத்து வந்து தலை காட்டுபவனை ஒப்பவன். இவ்வேறுபாடு தவிரக் காப்பியத்தின் இடையறா நடக்கைக்கு இலக்குவனும் பரதனும் நிகரான பாத்திரங்கள் என்று அறிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு மீட்சிப் படலத்துத் தம்பியர் இருவரையும் கொண்டு வந்த நிறுத்தித் தழுவவைத்து ஊர் மக்கள் சமமாகப் பாராட்டுமாறு கம்பர் செய்திருப்பது காப்பிய நேர்மை என்று கூறலாம். பாத்திரத்தின் உண்மைத் தன்மையை உரிய இடத்து மறவாது உலகறியச் செய்வது புலவன் கடன். வளருகின்ற நினைவாற்றல் காப்பியப் புலவனுக்கு இன்றியமையாதது. இவ்வாற்றல் மிகப்பெற்றவர் கம்பர். எத்துணை ஆயிரம் செய்யுட்களுக்குப் பின்னும் ஒன்றை நினைத்து கொண்டு வந்து தொடர்புறுத்தும் பெற்றி கம்பர்பால் காண்பது போல் யாரிடம் காணப்போகின்றோம். அதனாற்றான் முழுப் பார்வை பொதுவாகக் காப்பியத்துக்கு வேண்டும்; அதுவும் கம்பர் காப்பியத்துக்கு மிகமிக வேண்டும் என வலியுறுத்துகின்றேன். . காப்பிய நேர்மை என்பது இற்றைச் சொற்பொழிவின் தலைப்பு. பாத்திரம் எல்லாம் ஒரு வகையால் புலவன் படைப்பு. உண்மைப் புலவனுக்குத் தான் படைத்த எப் பாத்திரத்திலும் விருப்பு வெறுப்பு இருக்காது. பாத்திரங்களுக்கு நன்மையும் தீமையும் மாறி மாறிக் கூறுதல் காப்பிய அறம். தீமை கூறுதல் வெறுப்பாகாது. நன்மை கூறுதல் பற்றாகாது. காப்பியத்துக்கு இருமையும் கூறுதல் இன்றியமையாதது. அநுமன் கண்ட ஊர்தேடு படலத்திலும் இராவணன் வதைப் படலத்திலும் இராவணனின் பல சிறப்புகள் வெளிப்படுகின்றன. காப்பியம் என்பது தேவாரமும் அன்று, ஏசலும் அன்று. ஒரேடியாக ஒரு பாத்திரத்தைத் தொட்ட இடமெல்லாம் தூற்றிப் பாடுவதும் படிப்பவர்க்குக் கசந்து போகும். போற்றுதல் தூற்றுதல் அளவு வேறுபடலாமேயன்றி ஒரே மூச்சாகப் புகழ்தல் இகழ்தல் என்பது இயல்பும் இல்லை, சுவையும் இல்லை. - . இராமன் தலைமை எல்லாக் காப்பியத்தையும்விட இராமாயணத்துத்தான் பாத்திரங்கள் மிகுதி; தலைமையான பாத்திரங்களும் மிகுதி. தசரதன், கைகேயி, கூனி, இராமன், சீதை, இலக்குவன், பரதன் எனவும், வாலி, தாரை, சுக்ரீவன், அனுமன், அங்கதன் எனவும்