பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 105 இல்லையா? பதினான்கு ஆண்டும் இராமன் கூட இருந்த இலக்குவன் நேர் தொடர்பினன் என்றால், அப்பதினான்கு ஆண்டும் இராமன் வரவையே எதிர்பார்த்துத் தவஞ் செய்து கொணடிருந்த பரதன் அத்தொடர்பில் குறைந்தவன் ஆவானா? தொடர்புக்கு உடனுறைதலும் உடனுறையாமையும் காரணம் அன்று. எண்ணத்தில் தொடர்பு இருந்ததா? இதுவே பார்க்கத் தகும். இலக்குவன் உடனுறைந்து இராமனை மறந்திலன்; பரதன் இராமனைப் பிரிந்தும் மறந்திலன், இலக்குவனுக்கும் பரதனுக்கும் இராமனை மறவாமை பொது. இலக்குவன் உடனிருந்து துன்புற்று மெலிந்தான்; பரதனோ பிரிந்த அண்ணனை எண்ணி எண்ணி ஊணும் உறக்கமும் இன்றி மெலிந்தான். உயுத்த காண்டத்து மீட்சிப் படலத்து ஒரு செய்யுள். நாடு திரும்பிய இராமனைப் பரதன் வணங்குகின்றான்; வணங்கிய பரதனை இலக்குவன் வணங்குகின்றான். பரதனும் இலக்குவனும் தம்முள் ஒருசேரத் தழுவிக் கொள்ளும் அரிய காட்சியைக் கண்ட ஊர்மக்கள் எந்த உடம்பு அதிக மெலிவு என்று எடை போடுகின்றனர். ஊடுறு கமலக் கண்ணி - திசைதொறும் சிவிறியோடத் தாடொடு தடக்கையாரத் தழுவினன் தனிமை நீங்கிக் காடுறைந்துலைந்த மெய்யோ கையறு கவலை கூர - நாடுறைந்துலைந்த மெய்யோ நைந்ததென்றுலகம் நைய. காடு சென்ற மெலிந்த இலக்குவன் உடலோ, நாடு. இருந்தும் மெலிவுற்ற பரதன் உடலோ மிக மெலிந்தது எது என முடிவு கட்ட முடியாமல் மக்கள் கலங்கினர். என்றால், இருவரும் சமம் என்பது பெறப்படும். பிரிந்து இருந்து சிந்தனையால் மெலியும் தலைவிக்கு அகத்திணையில் என்ன் என்ன மதிப்பு உண்டோ அன்ன மதிப்பு இராமாயணத்தில் பரதாழ்வனுக்கு உண்டு, அயோத்தியா காண்டத்தோடு பரதன் நின்று விடுகின்றான் என்பதனால், அவனைக் கிளைப் பாத்திரமாகக் கருதினார் போலும் வ.வே.சு. கதையோட்டத்தை நீள வளர்க்கவும், உடனே தடுக்கவும் வல்ல பாத்திரம் கிளைப் பாத்திரம் ஆகாது. பரத்துவாசர் விருந்தில் இருந்த ராமன் அதுமனை முன் போக்கிப் பரதன் தீப்பாய்வதைத் தடுத்திராவிட்டால் இராமகாதை இருண்ட கதையாகி இருக்கும். பரதன் மூவரோடு ஒத்து எண்ணத்தக்க புரத்திரம் என்பதற்கு, அநுமன்த்ன் அயோத்தி தூது. ஒன்றே போதும். ஆதலின்