பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - w கம்பர் வாலி வதைப் படலம், கிட்கிந்தைப் படலம், சுந்தர காண்டத்தில் ஊர்தேடு படலம், காட்சிப் படலம், நிந்தனைப் படலம், உருக்காட்டுப்படலம், சூளாமணிப் படலம், பிணி வீட்டுப் படலம், உய்த்த காண்டத்தில் மந்திரப் படலம், இரணியன் வதைப் படலம், வீடணன் அடைக்கலப் படலம், அங்கதன் தூதுப் படலம், முதற்போர்ப் படலம், கும்பகருணன் வதைப் படலம், நாகபாசப் படலம், பிராட்டி களங்காண் படலம், மாயா சீதைப் படலம், இந்திரசித்து வதைப் படலம், இராவணன் வதைப் படலம், மீட்சிப் படலம் என வரும் ஒவ்வொரு படலமும் ஒரு நாடகமாம் தகுதியுடையது. நிகரற்ற நிறைந்த பரந்த ஒரு காப்பியம் . ஆதலின் இராமாயணம் எத்துணைத் தலைப்புகளிலும் பேசுவதற்கு இடங்கொடுக்கின்றது. சென்று தேய்ந்து இறுதல் என்ற நூற் குற்றம் இன்றி, புணர்ந்தாற் புணருந் தொறும் போகம் பின்னும் புதிதாய்... வளர்கின்றதே என்ற திருக்கோவைப்படி பாட்டுக்குப் பாட்டு, படலத்துக்குப் படலம், காண்டத்துக்குக் காண்டம் கருத்துயர்வைக் காண்கின்றோம். ஒரு கட்டுரை எழுதியபின், இன்னொரு கட்டுரைக்குப் பலர்பால் கருத்து இருப்பதில்லை. ஒருசில கட்டுரை எழுதியோர் மேலும் எழுதும் கட்டுரைகளில் முன்னவை திரும்பத் திரும்ப வரக் காண்கின்றோம். இதற்குச் சிந்தனை வறுமையே காரணம்; சிந்தனைச் செல்வம் பயக்கும் காப்பியங்களை முறையோடு படியாமை காரணம். பதினாயிரம் பாடல்கள் பாடிய பின்னரும் கம்பநாடருக்குக் கருத்து வறளவில்லை; தொட்ட இடம் எல்லாம் ஊற்றுக் கண்களையே காண்கின்றோம். கம்பரின் கருத்து வளத்துக்கு ஒரு பெருங் காரணம் சிந்தனைத் தொடர்பு அல்லது தொடர்புச் சிந்தனை எவற்றை எவற்றை எத்துணை எத்துணை ஒருங்கு கூட்டி இணைத்து அறாது சிந்திக்க முடியுமோ அவ்வளவு சிந்தித்தவர் கம்பர். இவர்தம் சிந்தனை முழுப் பார்வையினாற்றான் விளங்கும். - இலக்குவனும் பரதனும் இராமன், சீதை-இலக்குவன் என்ற மூவரையே இராமாயண முகப்புப்படமாகப் போடுவது ஒரு வழக்கு ஏன்? இம் மூவரும் நாட்டைப் பிரிந்து.காடு ஏகினர், ஒன்றாகத் துயருற்றனர், பதினான்கு ஆண்டு கழித்து நாடு மீண்டனர். தயரதன் குடும்பத்தில் இராமாயணக் குடும்பத்துக்கு இம் முப்பாத்திரங்களே இன்றியமையாதனவா? முகப்புப் படம் மூவர் படம் கற்றோரை. மயக்குகின்றது. பரதனுடைய சம்பந்தம் கதைக்கு - இராமாயணக் கதை அனைத்துக்குமே என்று பெர்துவாகவே சொல்ல வேண்டியது - பாக்கியான சம்பந்தமாகத்தான் இருக்கின்றது என்று எழுதுகின்றார் வ.வே.சு. இராமாயண நிகழ்ச்சியில் பரதன் பக்கத் - தொடர்பு உடையவன்தானா? நேர்தொடர்பு உடையவன்