பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 103 இராமாயணக் காப்பியம் 'கற்றனைத்து ஊறும் அறிவு என்றார் வள்ளுவர். பிற வகை. இலக்கியங்களைக் கற்பதனால் ஊறும் அறிவினைக் காட்டிலும் காப்பியத்தைக் கற்பதனால் ஊறும் அறிவு மிகுதியாகும். ஏனை இலக்கியங்கட்கு உலகத்தின் ஒவ்வொரு துறையே பொருள். காப்பிய இலக்கியத்துக்கு உலகமே பொருள். காப்பியன் உலகத்தை நினைத்து, உலகத்தை வளைத்து, உலகத்தை வளர்த்து எழுதுகின்றான். ஆதலின் காப்பியக் கல்வி தரும் அறிவு பரந்தது, வற்றாதது, சிந்தனையை வளர்ப்பது. கல்வியின் பயன் என்ன? காலந்தோறும் கருத்து வேறுபடுகின்றது. எழுதும் கைதோறும் கருத்து வேறுபடுகின்றது. கல்வியின் முதலான, மெய்யான பயன் ஒன்றுதான். அதுவே அறிவென்னும் சிந்தனைச் செல்வம். அச்செல்வத்தைக் காப்பியம் போல், பிறிதொன்று தருவதில்லை. அதுவும் கம்பரின் காப்பியத்தில் கிடைப்பது போல் வேறொரு காப்பியத்தில் விரிவாகவும், வெளிப்படையாகவும் கிடைப் பதில்லை. - بیمه است. سیسی سی پیر தமிழ்க் காப்பிய வரலாற்றில் இராமாயணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தங்க- இலக்கியத்துக்கும் சங்கப் பின் இலக்கியத்துக்கும் சிலப்பதிகாரம் இலக்கியப் பாலமாக விளங்குவது போல, இராமாயணமும் இடைக் கால முன் இலக்கியத்துக்கும் இடைக்காலப் பின் இலக்கியத்துக்கும் ஒரு பாலமாக நிற்கின்றது. ஒசையாலும் சொல்வளத்தாலும் கற்பனையாலும் உணர்ச்சியாலும் ஒட்டத்தாலும் இராமாயணம் தமிழ் நிலத்து ஒரு வழிக்கல். கம்பர் தமக்கு முன் தோன்றிய சிலப்பதிகாரம். மணிமேகலை, சிந்தாமணி, பெருங்கதை, பெரியபுராணம் முதலான காப்பியங்களின் வனப்புக்களை வடித்துக் கொண்டும், தம் மதி நுட்பத்தால் நுண்ணிய பல வனப்புக்களைப் படைத்துக் கொண்டும், உவமையில்லா ஒரு பெருங் காப்பியத்தை ஆக்கினார்; பின்னொரு புதிய காப்பியத் தோற்றத்துக்கு இடமில்லாதபடி இராமாயணத்தைக் காப்பிய எல்லைக் கல்லாக நிறுத்தினார். - விரிவிலும் செறிவிலும் கம்பருக்கு இண்ை யார்) இராமாயணத்தின் பல படலங்கள் தனித்தனி நூல் எனத் தகும் சிறப்புடையன. செகப்பிரியரின் நாடகங்கள் அனைத்தையும் தொகுத்தால் இராமாயணத்தின் பாதியளவு தானே இருக்கும். பால காண்டத்தில் தாடகைவதைப் படலம், அகலிகைப் படலம், மிதிலைப் படலம், கார்முகப் படலம், அயோத்தியா காண்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேசி சூழ்வினைப் படலம்; நகர் நீங்கு படலம், பள்ளியடைப் படலம், குகப் படலம், ஆரணிப் காண்டத்தில் சூர்ப்பனகைப்படலம், மாரீசன் வதைப் படலம், சடாயு உயிர்நீத்த படலம்; கிட்கிந்தா காண்டத்தில் மராமரப்படலம்,