பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H22 • . கம்பர் நெஞ்சின் அஞ்சினன் இளையகோவும் அயலுளோர்க்கு அவதியுண்டோ என்றபடி, அண்ணன் வெகுளி கண்டு இலக்குவனும் என்னாமோ என்று ஒடுங்கினான். அறமூர்த்தியாம் இராமனே உலகை அழிக்க முனிந்தான் என்றால் அவன் முனிவை யார் தடுக்க முடியும்? யார் முன்னின்று அறவுரை கூறமுடியும்? வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைகக் கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டீர் அம்பிழை விரிவிற் செங்கை oມລໍາເດີ້ຕໍ ஆயுங் காலை உம்பிழையென்பதல்லால் - உலகஞ்செய் பிழையும் உண்டோ? ஆதலால் முனிவாயல்லை அருந்ததி யனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கித் தேவர்தம் கருத்து முற்றி வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும் தீதுளதுடைத்தி என்றான் . சேவடிக் கமலம் சேர்வான். புயனிற வண்ணன் ஆண்டப் புண்ணியன் புகன்ற சொல்லைத் தயரதன் பணியி தென்னச் சிந்தையிற்றழுவி நின்றான். இராமன் சினத்தி சடாயுவின் அறிவுநீரால் முற்றும் அவிந்தது. தந்தை அனைய சடாயுவைத் தவிர இராமனை நேரடியாக இடித்துரைக்க வல்லார் யார்? மனையாளை வன்த்தில் தனியாக இருக்கச் செய்து இருவரும் மானின்பின் போனது குலப்பழி எனவும், உண்மையாக ஆராயுமிடத்து இவ்வளவு துயரத்துக்கும் காரணம்உங்கள் தவறு தான்; உலகம் செய்த தவறில்லை எனவும், தன் தவற்றை உணராது மேலும் சினந்து உலகை அழிக்க முற்படுவது பெருந்தவறு எனவும் சடாயு கூறுகின்றான். தன்னேரில்லாத் தலைவன் வணங்கும் ஒரு பாத்திரம் சடாயு ஆதலின் அவனைக் கொண்டு இராமனை வழிப் படுத்துகின்றார் கம்பர். சடாயுவின் அறவுரையால் யார் பிழை என்ற உண்மையை மன்பதை உணர்கின்றது. கைகேசியின் சூழ்ச்சியால்