பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 125 உம்பி யுணர்வுடையான் சொன்னஉரை கேளாய் நம்பி குலக்கிழவன் கூறுநலம் ஓராய் கும்ப கருணனையும் கொல்வித்தென் கோமகனை அம்புக் கிரையாக்கி ஆண்டாய் அரசைய, என்று மகன் அதிகாயன் மாண்டபோது தாய் தானியமாலினி அரற்றுகின்றாள். அக்கன் இறந்தபோது கொன்றனை நீயே யன்றோ அரக்கர்தம் குழுவை' எனவும், அதிகாயன் இறந்தபோது, புந்தியில்லாய், மக்கள் துணையற்றனை இற்றது உன் வாழ்க்கை' எனவும், போருக்குப் போகுமுன் ஆசைதான் அச்சீதைபால் விடுதியாயின் அனையவர் சீற்றம் தீர்வர் எனவும் பலவாறு தந்தை முன்னின்று கழறினான் இந்திரசித்தன். அரிய மகன் மாண்டபோது 'இச்சீதையென்று அமிழ்தாற் செய்த நஞ்சின்ால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ என்று இராவணன் கேட்கப் புலம்பினாள் மண்டோதரி. சீதையைக் கொல்ல ஒடியபோது, 'நின்புகழுக்கு மன்னா கேடு வந்தது' என்று இடித்துத் தடுத்தான் மகோதரன். மனைவியரும் தம்பியரும் புதல்வரும் உற்றாரும் பெற்றாரும் இராவணனைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ஆதலின் அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை' என்று சீதை இராவணனை இகழ்ந்தது பொருந்தாது. பலர் பல நிலையில் இடிக்கப் பெற்றமையினாற்றான், நோக்கறவும் எம்பியர்கள் மாளவுமிந் நொய்திலங்கை போக்கறவும் மாதுலனார் பொன்றவுமென் பின்பிறந்தாள் மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைக்கிடந்த ஏக்கற.வாலின்னம் இரேனோ உனையிழந்ததும், எனவும், சினத்தொடும் கொற்றம் முற்றி - இந்திரன்.செல்வம் மேவி நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால் எனக்குநீ செய்யத் தக்க கடனெல்லாம் ஏங்கி யேங்கி உனக்குநான் செய்வதானேன் என்னின்யா ருலகத் துள்ளார், - எனவும், இராவணனும் சோகத்தின்போது தன் குற்றத்தைச் சொல்லி அழுகின்றான். அவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டிய பலரும் வீடணன் போல் விலகாது, ஏன் துணை நின்றனர் என்று நீங்கள்