பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - கம்பர் கேட்கலாம். உடன் பிறப்பாலும், நன்றியுணர்வாலும், குடிமைப் பண்பாலும், வீரவுணர்வாலும், கொள்கை எப்படியிருப்பினும் பகைக் காலத்து அரசனை விட்டுக் கொடுப்பது நாட்டுப்பற்று ஆகாது என்ற அன்பினாலும் துணை நின்றனர். தயர்தன் இறப்பிற்கும் இராமன் துறப்பிற்கும் காரணமான, தீயவை யாவையினும் சிறந்த தீயாளான கைகேசியைக் குடும்பத்திலிருந்து ஒதுக்கினார்களா? தண்டித்தாலும் இறுதிவரை அணைத்துக் கொண்டு தானே வாழ்ந்தனர். மறுபக்கம் சிறிது சிந்தித்துப் பாருங்கள். கய்கயன் தனயை முந்தக் காலுறப் பணிந்து மற்றை மொய்குழல் இருவர் தாளும் - முறைமையின் வணங்கும் செங்கண் அய்யனை அவர்கள் தாமும் அன்புறத் தழுவித் தத்தம் செய்யதாமரைக்கண் ணிரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். நாடு திரும்பிய இராமபிரான் முதற்கண் யாரை வணங்கினான்? இராமாயணத்துக்கு முதற் காரணமாக இருந்த கொடிய கைகேசியைப் பணிந்தானாம். அப்புறந்தான் தன்னைப் பெற்றெடுத்த கோசலையையும், தன்னுடன் அடியனாக வந்த இலக்குவனைப் பெற்றெடுத்த சுமித்திரையையும் பணிந்தானாம். இராமன் குடும்பத்து இவ்வொற்றுமை பாராட்டப்படும் என்றால், இராவணன் குடும்பத்து உறவினர் ஒற்றுமை பாராட்டுதற்கு உரியதில்லையா? . அறிவும் ஒழுக்கமும், இன்றைய சொற்பொழிவின் தலையான கருத்தை இனிச் சுட்டிக்காட்டிமுடித்துக் கொள்ளவிரும்புகின்றேன். தன்னேரில்லாத் தலைவனான இராமனும் குற்றஞ் செய்தவனே, பெருந் தேவர்கள்பால் வரம் பெற்றுத் தேவர்களைப் பணிகொண்ட இராவணனும் குற்றஞ் செய்தவனே. தலைவர்கள் பெரும் பண்பினாலும் காப்பியம் உருவாகும். அன்னவர்தம் பெரும் பிழையாலும் காப்பியம் உருவாக வேண்டும். இது காப்பிய இலக்கியத்தின் சிறப்பிலக்கணம். இராமன் செய்த குற்றம் என்ன? மாயமான் என்று தெளிவுடைத் தம்பி எடுத்தும் தடுத்தும் காட்டியதைப் பொருட்படுத்தாது மயக்கத்தால் சீதையின் புலவிக்கு ஆட்பட்டு மானின்பின் சென்ற குற்றம். இராவணன் செய்த குற்றம் என்ன? மற்றொருவன் மனைவியைக் காமுற்ற குற்றம். இராமன்