பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நேர்மை 127 குற்றமும் இராவணன் குற்றமும் குற்றம் என்ற பொதுப்பேர் பெற்றாலும் இரண்டின் தன்மையும் முற்றும் வேறுபாடானவை. இராமன் செயல் அறியாமைப்பாற்பட்டது. இராவணன் செயல் தீயொழுக்கத்தின் பாற்பட்டது. இராமன் அறிவில் குற்றப்பட்டான். இராவணன் ஒழுக்கத்திற் குற்றப்பட்டான். 'அறிதோறு அறியாமை கண்டற்றால் என்பது வள்ளுவம். ஆதலின் அறிவுக் குற்றம் உணர்ந்த பின் வாழ்வில் வளர்ச்சி தரும். தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்லும்போது உலகம் பொறுத்துக் கொள்ளும். அறியாமைப் படுதோறும் அறிவு வளரும். இன்று பெற்ற அறிவு நாளை அறியாமையாகவும், நாளையறிவு பின்னொரு நாள் அறியாமையாகவும் மாறிமாறி உயரக் காண்கின்றோம். உலக வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சி. ஆனால் ஒருத்தன் வளர்ச்சி என்பது ஒழுக்க வளர்ச்சி. ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்பது வள்ளுவம். அங்ங்னம் ஒம்பாதபோது உயிர்போகும் என்பது குறிப்பு. எல்லாக் குற்றங்களுக்கும் இடையறவு உண்டு. சினம் ஒருகால் வரும் போகும், களவு ஒருகால் செய்தார் பின்பு திருந்தலாம்; பொய் பலகால் கூறினார் உணர்ந்து பின்னர் வாய்மைப்படலாம். சினப்பாரையும் பொய் கூறுவாரையும் பொறாமை கொள்வாரையும் ஈயாதாரையும் அறியாதாரையும் கண்டு பைஞ்ஞரிலம் அஞ்சுவதில்லை. விலகி ஓடுவதில்லை. ஒழுக்கம் என்ற சொல்லுக்கு இடையறாமை என்பது பொருள். இது காதல் ஒழுக்கத்தையே வழக்கில் குறிக்கும். கற்பு நிலையில் ஆணோ பெண்ணோ ஒருமுறை பிழைபட்டாற் குற்றம் இல்லை என்று கூறுவார் உண்டோ? இவ்வொழுக்கம் ஒருமுறையும் பிழைபாடு எய்துதற்கு உரியதன்று. இராவணனோ தான் ஒழுக்கம் பிழைத்ததன்றி, ஒழுக்கம் உடைய ஒரு பெண்ணை வலிந்து பிழையாக்கத் தன் அரசையும் ஆற்றலையும் பயன்படுத்தினான். எவ்வளவு பெருங்கேடு? எவ்வளவு மன்குல ஒழுங்குப் பிழை. இராவணனை இராமனாலும் திருந்தச் செய்ய முடியவில்லையே எனவும், அவனைக் கொன்றுதானே சீதையை விடுதலை செய்ய முடிந்தது எனவும் வினவினார் ஒருவர். 'புக்கோடி உயிர்பருகிப் புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி என்று கம்பர் கூறுவதால், இராவணனைக் கொன்றல்லது தூய்மை செய்ய இயலாது என்பது பெறப்படும். ஏன்? இராவணன் குற்றம் ஒழுக்கக் குற்றம், பிறன் மனை நயந்த குற்றம். - - - காப்பியப் பெரும் புலவர் கம்பர் இராமாயணம் பாடி மன்பதைக்குக் காட்டும் நேர்மை என்ன, அறியாமைக் குற்றத்துக்கு வாழ்வு உண்டு; ஒழுக்கக் குற்றத்துக்கு இனத்தோடு அழிவு தவிர