பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கம்பர் வாழ்வில்லை. நிகரற்ற பெருந்தலைவனான இராமனையும் குற்றம் உள்ளபோது கூறக் கம்பர் கைம்மடங்கியதில்லை; 'மதியின் ஒன்றும் தூக்கிலன்' என்று அவன் சிந்தனை செய்யாக் குற்றத்தை உரிய இடத்துப் பாடியுள்ளார். தம்பி சொன்ன வாய்மொழியை மனத்துக் கொள்ளவில்லை எனவும், மனைவியின் ஊடல் நோக்கியே நடந்து கொண்டான் எனவும் இராமன் காமத்தையும் மயக்கத்தையும் வெளிப்படுத்துக்கின்றார். இவன் காமம் கற்பின் பாற்பட்டது; மயக்கம் அறியாமைப்பாற் பட்டது; எனினும் அறியாமையின் விளைவை இராமன் பல்லாண்டு நுகர்ந்தான் என்பதைக் கவிக்கூற்றாலும் இராமன் கூற்றாலும் பிறர் கூற்றாலும் கம்பர் நேர்மைப்பட மன்பதைக்குப் புலப்படுத்தினார். * இராவணன் எல்லாச் செல்வமும் எல்லா அறிவும் பெற்றிருந்தும், தாய்போல் தொழத்தக்க பிறன் மனைவியைக் காமுற்று வேண்டாதன செய்தமையால், ஒருமுறை தவறிய ஒழுக்கத் தீமையால், அழிந்தான்; முக்கோடி வாழ்நாள் வாழ்வதற்கு இருந்தும், தன் தீமையைப் பல வரங்களும் தடுக்கமாட்டாது, குறுகிய காலத்தில் பழியோடும் மடிந்தான்; இனத்தோடும் குடும்பத்தோடும் மடிந்தான்.-- r - தலைவன் ஒருவனது ஒழுக்கத் தீமை எவ்வளவு பெரிய அழிவு செய்யும் என்பதனை இராமாயணக் காப்பியம் பைஞ்ஞரிலத்துக்குப் பாடிக்காட்டியிருக்கின்றது. இரு தலைவர்களின் இரு குற்றங்களால் தோன்றிய இராமாயணத்திலிருந்து நாம் அறிவது என்ன? முக்கியமான இடத்தில் தலைவர்கள் பேரறியாமைப் படக்கூடாது எனவும், விழுப்பமான ஒழுக்கத்தைக் கைவிடக்கூடாது எனவும், தலைவனே பேரறியாமையுற்றால், தலைவனே தீயொழுக் கனானால் விளைவுகள் காப்பியம் ஆகும் எனவும் அறிந்து கொள்கின்றோம். அறிவு வேண்டும் அதனினும் சிறந்த ஒழுக்கம் வேண்டும் என்று காட்டுவது இராமாயணம்; தலைவர்களுக்கு இவை தவறின்றி வேண்டும் என்று காட்டுவது இராமாயணம்; தலைவர்கள் தவறினால் உலகமும் ஏனை உயிர்களும் எவ்வளவு தொல்லையும் இழப்பும் பட நேரிடும் என்று காட்டுவது இராமாயணம். இவற்றை யார் என்று பாராது அழுத்தமாக ஆர்வமாக மன்குலத்துக்குப் பாடிக் காட்டியவர் கம்பர். கம்பர் காப்பியத்தை ஆராய்வது போல, அவர் கவிதையைச் சுவைப்பது போல, அவர் நேர்மையையும் உணர்வோமாக, உணர்ந்து உலகிற்கு உணர்த்துவோமாக! -