பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்களை வரைந்தெழுதிய காலத்தைக் காட்டிலும் அவை முகவழகும் முதுகழகும் பெற்றுப் பதிப்புருவம் கொண்டபோது, எழுத்துக்குலம் செம்மாப்பு எய்துகின்றது; தம் கருத்துக்கள் மக்கட் சந்தையில் அங்காடும்போது எழுத்தாண்மையர் ஏதோ ஒருவகைக் கொடை உலகிற்குச் செய்தது போன்ற பெருமித உணர்வு பெறுகின்றனர். இவ்வுணர்வே எழுத்தின் உண்மைச் செல்வம். என் எழுத்துப் பலவற்றைச் செவ்வரிசைப்படுத்தி யான் கண்டு மகிழவும் மன்பதையினர் கற்று மகிழவும் பதிப்பித்து வரும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார்க்கும் நன்றியுணர்வோடு வாழ்த்துக் கூறுகின்றேன். பதிப்பகம் பல பரிசு பெற்று நாடு மதிக்கும் நூலகமாக மேலும் வளர்ந்தோங்குக என்று வாழ்த்துவன். ギ என் வரிசை நூல்கள் பிழைத்திருத்தம் இல்லாத பதிப்பாகச் செப்பமொடு வெளிவருதற்கு உறுதுணை செய்து வரும் என் வகுப்புத் தோழர் நண்பர் முன்னை முதல்வர் திரு. சி. செல்வத் தாண்டவர்க்கு நன்றி கூறல் நட்புக்கு மிகையாகி விடாதா? எனினும் நன்றியை உணர்கின்றேன். வ.சுப. மாணிக்கம்