பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கம்பர்


பாட்டில் அதுவும் மெய்ப்பாட்டில் வைத்து மேற்செல்கின்றார் கம்பர். கருவை அதற்குரிய சிறிய அளவாகவே காட்டவேண்டும் என்று கருதினார் போலும். இவ்விடத்து இராமனைப் பேச விடுவது 'காதலுற்றிலன் இகழ்ந்திலன் என்ற கருத்துக்கு இகழ்ச்சியாகி விடுமோ என்று அஞ்சினார் போலும். தயரதன் வேண்டுகோளை இராமன் யாதும் மாறு நினையாமல் ஏற்றுக்கொண்டதற்கு ஒரே ஒரு காரணம், "கொற்றவன் ஏவியது" என்பது. கொற்றவன் என்ற எழுவாய்ப்பெயர் வரும்போது, அவன் ஒருவனைப் பார்த்து இது செய்க என்று சொல்லும்போது, ஏவுதல் என்ற வினை தானே பொருத்தம். அதுதானே கட்டளை காட்டக் கூடிய வினைச்சொல். இவ்வினைச் சொல்லை மீண்டும் மீண்டும் ஆசிரியர் ஆளும் இடங்கள் பல. . - என்று பின்னரும் மன்னன் ஏவியது அன்றெ னாமை மகனே யுனக்கறன். ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார். தெருளுடை மனத்து மன்னன் ஏவலிற் றிறம்ப அஞ்சி இருளுடையுலகம் தாங்கும் இன்னலுக் கியைந்து நின்றான். இத்தகைய இடங்களில் எல்லாம் மன்னனொடு அடுத்து ஏவல் என்ற வினைச்சொல் பயின்று வருவதைக் காண்கின்றோம். இங்ங்னம் முழுப்பார்வை பார்க்கும்போது எது நற்பாடம் என்று தீர்மானம் தெளிவாகச் செய்ய முடியும். . ஏழிரண் டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றாள்.' ஏழிரண்டாண்டின் வாவென்று ஏவினன் அரசன் என்றாள். 'ஏவினன் அரசன் என்ற பாடமே காப்பிய மரபு ஆகும். கருத்துக்குச் சிறப்பும் ஆகும் என்பது வெளிப்படை. இராமன் பண்பை நன்கு அறிந்தவள் கைகேசி. இஃது அரசன் கட்டளை என்று யார் வந்து கூறினாலும், யார் கூறினார்கள் என்று பாரான், அக்கட்டளைக்கு உடனே பணிவான் என்பது அவளுக்குத் தெரியும். இப்பண்பினாலே தான், அரசன் அன்று ஏவியபோதும் முடிசூட்டிக் கொள்ள இசைந்தான் என்பதும் அவளுக்குத் தெரியும். எவனுக்கு எப்பண்பு உண்டோ அப்பண்பு வழியாகத்தானே அவனை உயர்த்தவோ R மடக்கவோ முடியும். 'யாது கொற்றவன் ஏவியது அது செயலன்றோ