பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காப்பியப் பார்வை

31


நீதி எற்கு என்பது இராமன் குறிக்கோள். எது ஏவினான் என்று அவன் பாரான். கொற்றவன் ஏவினானா, சரி என்பான்; மறுபேச்சுப் பேசான். ஆதலின், இராமன் உணர்தற்கு உரிய சொற்களைக் கைகேசி தெரிந்துகொண்டு, ஏவினன் அரசன் என்று மொழிந்தாள். இவையே இராமனை உணரவைக்கும் சொற்கள். 'இயம்பினன் அரசன் என்ற பாடத்துக்கு இங்ஙனம் உணர்த்தும் ஆற்றல் இல்லை என்பதை அறிய வேண்டும். இயம்புதல் என்பது பொதுவினை, ஏவுதல் என்பது கட்டளைவினை, செய்ய வேண்டும் என்ற அதிகாரக் குறிப்புடைய வினை. தாதையேவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந்திலையோ நெடுமொழி யன்றோ, என்று சிலப்பதிகாரமும் இராம காதையைக் குறிக்குமிடத்து, 'தாதை ஏவலின் என ஏவற் சொல்லைப் பயன்படுத்துகின்றது. ஏவல் என்ற சொல்லால் தாதை என்பவன் அதிகாரமுடைய மன்னன் என்பது குறிப்பிற் பெறப்படும். ஒரு பாத்திரத்துக்குச் சில பண்புகளை அமைத்து நூல் முழுதும் புனைந்து செல்கின்றான் காப்பியப் புலவன். அவன்போல் கற்பவர்க்கும் முழுநூற் பார்வை இருக்குமாயின், பல கசடுகள் நீங்க இடனுண்டு. தொடர்பழகு அகநானூறு முதலிய தொகை நூல்கள் தனிப்பாடல்களின் செயற்கைத் தொகுப்பு ஆதலின், காப்பிய அழகு என்னும் தொடர்பழகுக்கு இடனில்லை. காப்பியம் இல்லாவிட்டாலும் ஓர் ஆசிரியன் எழுதிய நூலில் கருத்து வகையால் (கதை வகையாலன்று) தொடர்பழகு ஓடவே செய்யும். சிறு நூலான ஆத்திசூடியில், ஏற்பது இகழ்ச்சி', 'ஐயமிட்டு உண் என்ற நீதிகள் அடுத்தடுத்து உள. யாசிப்பது கீழ் ஆயினும் யாசித்தார்க்குக் கொடுப்பது மேல் என்ற கருத்தோட்டம் உண்டு. பெரியாரைத் துணைக்கொள் எனவும் பேதைமை யகற்று' எனவும் அடுத்தடுத்து வரும் அறிவுரையால் 'பெரியவர்களைச் சார்ந்தால் அறியாமை நீங்கும்' என்ற தொடர்பை உணர்கின்றோம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', 'தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை என்று வரும் கொன்றை வேந்தன் அடிகளில் இணையழகு உண்டு. 'ஊழிற் பெருவலி யாவுள' என்று ஊழ் அதிகாரத்திற் சொல்லிய வள்ளுவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் என ஆள்வினையுடைமை அதிகாரத்தில் கூறும் போது, நீண்ட கருத்தோட்டம் வெளிப்படுகின்றது. . கொலையிற் கொடியாரை வேந்தன் தண்டிக்க வேண்டும் என்ற வள்ளுவர்