பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கம்பர் அடுத்த, கொடிய கொலைஞனினும் கொடுங்கோல் வேந்தன் மிகக் கொடியவன் என்று கூட்டும்போது நினைவுத் தொடர்பு புலனாகின்றது. 'கண்ணோட்டத்து உள்ளது உலகியல்' என்றாலும், கருமம் சிதையாமல் கண்ணோட வேண்டும் என்று ஒரு வரம்பு காட்டும்போது தொடர்நினைவு ஏற்படுகின்றது. ஆத்திசூடி முதலியன எல்லாம் நீதி நூல்களாயினும், இயற்றிய புலவர் ஒருவர் ஆதலின் எண்ணத் தொடர்பு இருத்தல் இயல்பேயாகும். அருள் நூல்களிலும் இத்தொடர்பினைக் காணலாம். நீத்தல் விண்ணப்பத்தில் சிவனைப் பாடிப் புகழ்ந்து கொண்டே வரும் மணிவாசகர், - மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே. உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சனென்றேசுவனே. என்றவாறு இறுதிச் செய்யுட்களில் வசை தொடுக்கின்றார். இறைவனை வைகின்றோம் என்ற எண்ணம் அன்பர் உள்ளத்தை அலைக்கின்றது. ஆதலால் மேலும் பாடுகின்றார், ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய் என்று. முன் ஏசினமிையால் அன்றோ இப்பாட்டு மேலும் பாடவேண்டிய நிலை ஏற்பட்டது. - - கதைத் தொடர்பற்ற, செய்யுள்' தொடர்புடைய நூல்களில் மேற்கண்டவாறு தொடர்பழகு இருக்குமாயின், கதையும் செய்யுளும் தொடர்ந்த மாளிகையனைய பெருங்காப்பியங்களில் எவ்வளவு தொடர்பழ்கு காணவேண்டும். காப்பியம் என்பது தனிப்பாடற்றிரட்டு அன்று தனிப்பாடற்றொகுதியன்று. இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தனிப்பாடல் என்ற நோக்கொடு காப்பியத்தைக் கற்கப் புகுவது குருடர்கள் தடவிப் பார்த்த யானைபோல் ஆகிவிடும். கம்பரின் பேராற்றல் இராமாயண முழு வுருவத்தில் அடங்கியுள்ளது. தனிப் பாடல் நயமாகப் பாடியவரும் பாடுவோரும் நாட்டில் பலர். அவருள் ஒருவராகக் -கம்பரை எண்ணுகின்றீர்களா? பஞ்சிலிருந்து நூலிழைத்தவர் அல்லர் கம்பர்; ஆடை நெய்தவர். மண்ணிலிருந்து ஒரு செங்கல் சுட்டவரல்லர் கம்பர் விடே கட்டியவர். ஆதலின் இராமாயணத்தை