பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கம்பர் 3 விரைந்து தூக்கிச் சென்றுவிட ஆசைப்படுகின்றவன் இப்போது எவன்? அநுமன் - செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன் என்று கம்பர் பெருமானால் பாராட்டப்படுபவன்; மாணியாம் படிவமன்று மற்று.இவன் வடிவு அமைந்த ஆணி இவ்வுலகுக்கெல்லாம் என்று இராமபிரானால் பார்ாட்டப்படுபவன்; அம்மையாய் அத்தனாய அப்பனே அருளின் வாழ்வே' என்று சீதைப் பிராட்டியால் புகழப்படுபவன்; அத்தகைய மாசு மறுவற்ற அண்ணல், 'என் மென்மயிர் பொருந்திய தோள் மேல் ஏறிப் புறப்படுக’ என்று மன்றாடி வேண்டும்போது மறுப்பது எப்படி? காமுகன் நாட்டிலே இருப்பேன் என்று சொல்வது எப்படி? இது புலவன் காப்பியத்து ஈடுகட்டவேண்டிய ஒருகளம். அரிய தன்றுநின் னாற்றலுக்கேற்றதே தெரிய வெண்ணினை செய்வதுஞ் செய்தியே உரிய தன்றெனவோர்கின்ற துண்டதென் பெரிய பேதைமைச் சின்மதிப் பெண்மையால். முன் இரண்டடிகளில் அநுமன்தன் ஆற்றலைப் புகழ்ந்தும் பின் இரண்டிகளில் தன் கருத்தைப் பெண்மைமேல் ஏற்றியும் இவ்வாறு அநுமன் வேண்டுகோளை மறுக்க முயல்கின்றாள் சீதை. என்னை வஞ்சித்து எடுத்த வந்த நாய்களின் எண்ணப்போக்கை நீயும் நினைக்கலாமா எனவும், என் உடலைப் பார்த்த அரக்கனின் கண்களைக் குத்துவதை ஈண்டிருந்து யான் பார்க்க வேண்டாமா எனவும், இலங்கை பகைவரின் எலும்பு மலையாகாவிட்டால் என் இற்பிறப்பும் கற்பும் எங்ங்ணம் வெளிப்படும் எனவும், எனக்கே இலங்கையை எரிக்கும் கற்பாற்றல் உண்டெனினும் இராமனது வில்லாற்றலுக்கு மாசு வரக்கூடா தன்றோ எனவும், சீதை அநுமனுடன் வரக்கூடாமைக்கு உரிய காரணங்களைச் சொல்லி வரும்போது, பின்வரும் இரு பாடல் அடுத்தடுத்துள. வேறும் உண்டுரை கேளது மெய்ம்மையோய். ஏறு சேவகன் மேனியல் லாலிடை ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆணெனக் கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ. தீண்டு வானெனின் இத்தனை, சேண்பகல் இ.ஆயிர்மெய்யின் இமைப்பின்முன் அண்டுத்ாவனென் றேநிலம் வன்மையால் கீண்டு கொண்டெழுந்தேகினன் கீழ்மையான்.