பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை 35 இவ்விடத்தில் வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பலர் பேசுவர். கைதொட்டுச் சீதையை இராவணன் தூக்கிச் சென்றான் என்று முதனூல் கூறியிருக்கவும், தமிழ் நாகரிகத்துக்கேற்ப, கம்பர் சிறிது மாற்றஞ் செய்தார் எனவும், பூந்தொட்டியைத் தூக்கிப் போதல்போல, நிலத்தோடும் சீதையை அகழ்ந்து கொண்டு சென்றான் இராவணன் எனவும் பாராட்டியும் பேசுவர். வான்மீகி வாய்மையும் கம்பன் புளுகும் எனச் சிலர் மறுத்துப் பேசுவர். வஞ்சகக் காமுகன் ஒரு.நங்கைய்ை வலிந்து மெய்தீண்டிவிடுவதால், அவள் கற்பியல் மாசுபடுவதில்லை. அவன் செய்கையால் அவள் திண்மை வெளிப்பட்டதென்றே மன்னினம் பாராட்டும். இது கதையாராய்ச்சி. இந்த இரு பாடல்களிடைக் கிடக்கும் தொட்ர்பழகை - காப்பிய்த்தை - நாம் காண்போம். காப்பியத்தில் உரையாடல்கள் எப்படி நடக்கின்றன? ஒரு பாத்திரம் நெடுநேரம் பேசுகின்றது. அப்பாத்திரத்துக்குப் பத்து இருபது பாடல் தொடுக்கிறான் புலவன். எப்படித் தொடுக்க முடிகின்றது? காப்பிய உரையாடலை வழக்குரையாடலோடு ஒப்பிடவேண்டும். ஒருவர் ஒருவரோடு பேசும்போது முகம் பார்த்துப் பேசுகின்றார். ஒவ்வொரு பேச்சுக்கும் கேட்பவன் மனக் குறிப்பையோ மெய்ப்பாட்டையோ கண்டு அதற்கேற்ப மேலும் பேசுகின்றார். உனக்குக் கடன் தரமாட்டேன் என்பது முதற் பேச்சு. அதனைக் கேட்டவன் முகஞ் சுளிக்கின்றான் அல்லது தலைகுனிகின்றான். முன்போல அன்றிப் பத்து நாட்களில் திரும்பத் தருவதாயின் கடன் தரலாம் என்பது மறுபேச்சு. இவ்விரு பேச்சுக்களை மாத்திரம் இணைத்துப் பார்த்தால் கருத்தோட்டம் விளங்காது முரண்படும். இவ்விரு பேச்சுக்கு இடையே ஒரு மெய்ப்பாடு நிகழ்ந்தது. அதன் விளைவே மறுபேச்சு என்று கொண்டால் முரண்படாது. எனவே உரையாடல் என்பது பேச்சு - மெய்ப்பாடு - பேச்சு - மெய்ப்பாடு - பேச்சு என இரண்டும் கூடுதலாகவோ குறைவாகவோ இரண்டறக் கலந்து வரும் கலப்பாடல் என்று அறிய வேண்டும். முழுதும் பேச்சுமயம் என்று எண்ணினால் கருத்துத் தொடர்பு அற்றுக்காட்டும். » பாத்திரப் பேச்சுக்களைப் பாடிவரும் புலவன் பேசி வந்த முறையை நிரல்பட எழுதுவான். ஒரு பேச்சுக்கும் மறு பேச்சுக்கும் இடைப்பட்ட மனவோட்டத்தை - மெய்ப்பாட்டை - அவன் பெரும்பாலும் காட்டமுடியாது. காட்டப் புகின், காப்பியவோட்டம் தடைப்படுவது மட்டுமின்றிக் காப்பியம் விளக்க நூலாகிவிடும். அதனைக் கண்டு கொள்ளுதல் கற்பவர் கடன் முதல் ஒன்று மொழிந்தபின் மற்றொன்று மொழிவதற்கும் பின்னொன்று