பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . கம்பர் மொழிவதற்கும் என்ன குறிப்புக்கள் சொல்பவர்தம் மனத்தோ முன்னிலையார் மனத்தோ ஒடியிருக்கவேண்டும் என்று கண்டு. நிரப்பிக் கொள்ள வேண்டும். கற்பனையால் காணும் இவ்விலக்கியப் பயிற்சியே தலைப்பயிற்சி. பாட்டுக்களுக்கிடையே மறைந்து கிடக்கும் நினைவுத் தொடர்பைக் கண்டுகண்டு படித்துச் செல்வது நல்ல காப்பியப் பார்வையாகும். - மேலே இரு செய்யுட்கள் சீதை கூற்றாகக் காட்டினோமே! இவற்றின் எண்ணவுறவு என்ன? அநுமனுடன் செல்ல மறுக்கும் சிதைப்பிராட்டி காரணங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வரும்போது, இவைமட்டுமல்ல இன்னும் ஒரு காரணம் உண்டு, கேட்பாயாக. என் கணவன் திருமேனியல்லால் என் உடம்பு எந்த ஆண் மகனையும் தீண்டியதில்லை. நீ ஐம்புலன்களை முற்றும் ஒடுக்கிக் கொண்டவன்தான். ஆண்மை முழுதும் அடக்கிய நின்னையும் வடிவு நோக்கி ஆண் என்றுதானே மன்பதை கூறும். ஆதலின் எந்நிலைய ஆடவனையும் மெய்திண்டல் அழகன்று என்று தன் ஒழுக்கத்தையும் மக்கட் பார்வையையும் இணைத்து மொழிகின்றாள். இவ்வார்த்தை கேட்ட அநுமன் மனம் சும்மா இருந்திருக்குமா? அவன் மனம் வெறுமனே இருக்கும் என்று சீதைதான் எண்ணியிருப்பாளா? புலன் அடக்கிய அன்பனான என்மேனிபடுவது தொடுவது இழுக்கென்றால் இராவணன் எங்ங்ணம் கொண்டு வந்தான்? இருபது கைகளாலும் தூக்கி வாரிக்கொண்டுதானே வந்திருக்கவேண்டும்? இராவணன் தீண்டப்பட்டவள் என்று மன்னாயம் கூறாதா? இம்மனவோட்டங்களை அநுமன் தன் முகக் குறிப்பில் சீதைக்குக் காட்டியிருக்கவேண்டும். அல்லது இம்மன வோட்டத்தைத் தடுக்கச் சிதை முந்துற்று அடுத்த பாட்டைச் சொல்ல நினைந்திருக்க வேண்டும். நின் உருவைத் தீண்டுதல் கூடுமோ என்று வினாவிய சீதை, இராவணன் தீண்டியிருப்பான் அல்லனோ என்று ஒரு வினாவுக்கு விடை கூறுபள் போல, - * தீண்டு வானெனில் இத்தனைச் சேண்பகல் ஈண்டு மோவுயிர் மெய்யின் இமைப்பின்முன் மாண்டு தீர்வனென்றேநிலம் வன்மையால் கீண்டு கொண்டெழுந்தேகினன் கீழ்மையான், என்று தொடர்ந்து உரையாடினாள். அவன் தீண்டவில்லை என்று சுட்டினால் மட்டும் போதாது. தீண்டாது எப்படிக் கொண்டு வந்தான்? என்று மேலும் ஒரு வினாவுக்கு இடம் வையாமல்,