பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை - 37 நிலத்தையே அகழ்ந்தெடுத்துக் கொண்டு புறப்பட்டான் என்று விளக்கினாள். இங்கு ஒப்புமைக்காக வழக்கில் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். இந்நிகழ்ச்சி நம் பாராள்மன்றத்தில் நிகழ்ந்தது. தலைமையமைச்சர் நேரு அமெரிக்காவுக்குச் சென்றபோது, தம் ஒருமகள் இந்திரா காந்தியையும் அழைத்துச் சென்றிருந்தார். இருவரும் திரும்பி வந்த சின்னாளில், பாராள்மன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் அமெரிக்காவுக்குப் போய்வந்த செலவு என்ன என்று ஒரு கேள்வி நேருவைப் பார்த்துக் கேட்டார். என்மகள் செலவு இதில் சேர்க்கப்படவில்லை என்று சட்டென்று விடையிறுத்தார் நேரு பெருமகன். அமெரிக்காவுக்குச் செலவில்லாமல் போகமுடியாது. பெருஞ்செலவு ஆகும். ஒருவர் அதுபற்றி என்ன செலவு எனக் கேட்கின்றார் என்றால் ஏதோ அக்கேள்வியில் ஒர் உட்குறிப்பு இருக்க வேண்டும். குறிப்பிற் குறிப்பு உணர்ந்து பொள்ளென மறுமொழி கூறாவிட்டால் சில சமயங்களில் கேவலமாகி விடும். அமெரிக்காவுக்குப் போய்வந்த செலவு எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ.50,000 என்று நேர்விடை கூறுவதாக வைத்துக் கொள்வோம். உடனே மறுகேள்வி வரும், உங்கள் மகள் பயணச் செலவும் இதிற் சேர்ந்ததுதானே என்று. இத்தகைய ஒரு கேள்விக்கு இடம் கொடுப்பது நேரு கும்பத்துக்குப் பெருமையா?, பாராள்மன்றத்துக்குப் பெருமையா? தகா இடத்து வரும் தும்மலை மூக்கைக் கசக்கி முன்னடக்கம் செய்வது போலத் தகாத கேள்விகள் வருவதற்கு முன்னரே குறிப்பறிந்து முன்விடை கூறல் நல்ல உரையாடல் ஆகும். சில வெளிப்படைக் கேள்விகள் செவிக்கு இனிக்கா. - ஐம்பொறி அடக்கிய நின்னையும், ஆண் எனக் கூறும் என்று பிராட்டி மொழியக் கேட்ட அநுமன், இராவணன் தங்களை மெய்தீண்டி எடுத்து வந்தானா, இல்லையா? எப்படி எடுத்து வந்தான்? என்று சிறு அளவில் கேட்பதாக வைத்துக் கொண்டாலும், அதற்கு இரண்டொரு செய்யுட்கள் எழுதி இருந்தாலும், யார்க்குப் பெருமை? அங்ங்னம் கேட்டு விடுவதே சிறுமை, அல்நாகரிகம். யார் யாரிடத்து எந்தக் கேள்வியைக் கேட்பது என ஒரு தரம் வேண்டாமா? ஆதலின் அநுமன் இட்ைமறித்து வினவியதாகச் செய்யுள் பாடாது, அவ்வினாக் குறிப்பைத் தொடர்புழகில் கம்ப்ர் காட்டினார். 'அநும இராவணன் தீண்டியிருப்பான் என்று நீ எண்ணலாம். தீண்டியிருந்தால் நான் ஈண்டு - இவ்வுலகில் இவ்வளவு காலம் இருப்பேனா? அவன் தீண்டாமைக்கு நான் உயிர் தாங்கியிருப்பதே அறிகுறி என்ற துடிப்பாக இயம்புகின்றாள் சீதை.