பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 * , தீண்டின் என் உயிர்போம் என்பது அக்கயவனுக்குத் தெரியுமே. அதனாற்றான் நிலத்தொடும் பெயர்த்து வந்தான் என்று மேலும் விளக்குகின்றாள். மேலும்மேலும் சில கருத்துக்களைச் சீதை கூறிச் செல்லுவதற்கு அவள் உள்ளத்துப் பிறந்த சிந்தனைச் செலவுகள் என்னவாக இருக்கும்? தீண்டினான் போலும் என்ற குறிப்பு என் தவக்கோலத்தைக் கண்ட அநுமனுக்கே முகிழ்க்குமாயின், சேணிடையுள்ள ஏனையோர் என்ன எண்ணுவர்? தன் கற்பின் அசையாத் திண்மையை - அசைக்க முடியாத திண்மையை வந்த தூதுவன்பால் ஐயமறச் சொல்லிவிட வேண்டும் என்று ஏழை நங்கை இறுதியாக எண்ணினாள். இராவணன் தன்னை என்றும் தீண்டான், அத்தகைய சாபம் உடையவன் என்று சுட்டினாள். பலவாறு சொல்லிப் புரிய வைப்பதினும் ஒன்று காட்டிப் புரியவைப்போம் என்று கருதியவள், - - ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்துகொண்டு ஈண்டு வைத்ததிளவல் இயற்றிய நீண்ட சாலை யொடுநிலை நின்றது காண்டி யையநின் மெய்யுணர் கண்களால். அநுமனே நின் கண்களால் பார்த்துக் கொள்; இப் பருண சாலை இலக்குவன் செய்தது; இராவணன் அப்படியே தோண்டிக் கொண்டு வந்து வைத்தது; நன்றாக உண்மையை உணரும் கண்களால் பார்த்துக்கொள் என்று தீண்டாமைக்கு ஒரு சான்றாகக் கண்முன் காட்டுகின்றாள். இதனை இராமனிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்பது அவள் குறிப்பு. நீங்கள் காட்டயான் என் கண்களால் கண்ட சான்றினை அப்படியே சொல்வேன் என்று அநுமன் அவள் முன்னே சொல்வது மிகையல்லவா? எனினும் அவன் திண்ணிய பருனசாலை காட்டிய அவள் மனக் குறிப்பைப் புரிந்து கொண்டான். புரிந்து கொண்டமை நமக்கு எங்கு வெளிப்படுகின்றது? - வேலையுள் இலங்கை யென்னும் விரிநகர் ஒருசார் விண்டோய் காலையும் மாலை தானும் இல்லதோர் கனகக் கற்பச் சோலையங் கதனின் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய தவஞ்செய்த தவமாம் தையல்.