பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை . 39 மண்ணொடுங் கொண்டு போனான் வானுயர் கற்பினாள்தன் - புண்ணிய மேனிதீண்ட அஞ்சுவான். அறுநூறு செய்யுட்களுக்கு அப்புறம், அசோகவனத்துச் சீதை காட்டிய சாலைக்காட்சியைக் கண்ட அநுமன், கண்ட அப்போதே திரும்பிச் சென்று இராமனைக் காணும் போது சொல்லவேண்டிய சான்று இது என்பதை நினைவிற் பொதிந்து கொண்டான் என்று புலனாகிறது. சூளாமணிப் படலத்துச் சாலைக்காட்சிப் பாடலையும், திருவடி தொழுத படலத்துச் சாலைச்செய்திப் பாடலையும் இணைத்துப் பார்க்கும்போது, சிந்தனைத் தொடர்பழகு வெளிப்படுகின்றது. தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கொடு காண்டி யைய நின்மெய்யுணர் கண்களால் என்று சீதை கொண்ட சிந்தனையும், இலங்கையில் கனகக் கற்பச் சோலையாயினும் அவளிருந்தது உன் தம்பி தொடுத்த புற்சாலை என்று அநுமன் மறவாது சொல்லிய சிந்தனைக் காரணமும் காப்பிய ஒட்டங்களாகும். தனிப்பாடலின் நயங்களால் இவ்வோட்டம் வெளிப்படுமா? தொடர்பு நயமே முடிவான காப்பிய நயம். கொடிய அரக்க வேந்தன் கைப்பட்டு அவன் நகரில் வைக்கப்பட்டிருந்தாலும் சீதையின் கற்புக்குப் பங்கம் இல்லை என்று அநுமன் தெளிவாக அறிவான். அசோகவனத்திடை அரக்கியர் சூழ இருந்த சீதையைக் கண்ட மாத்திரத்தே மாசுண்ட கூந்தலாள் கற்பும் காவலும் ஏசுண்டதில்லை' என்று முடிவுகட்டி விட்டான். அதன் மேலும் இராவணன் சீதைமுன் வந்தபோது, கூசியாவி குலைவுறுவாளையும், ஆசையால் உயிர் ஆசழிவானையும் காசில் கண்ணிணை சான்றெனக் கண்டானாதலின் சீதையின் கற்பு நலம் பற்றி யாதும் கவன்றான் இல்லை. அதற்கு மேலும் சிதைப்பிராட்டி தற்கொலை செய்து கொள்ளக் குருக்கத்தி மரத்துக்குச் சென்றதையும் நேரிற் கண்டு தடுத்தானாதலின், கற்புத் தூய்மை பற்றிய சிறுமணக் குறையும் அநுமனுக்கு இருந்திருக்க முடியாது; எனினும் ஓர் ஐயம் அவனுக்கு இருந்தது. அது இடையில் வந்த சிறிய ஐயம். தோள்மேல் எடுத்துச் செல்கின்றேன், ஏறிக்கொள்ளுங்கள் என்று இன்னடி பணிந்தபோது, இராகவன் திருமேனியல்லாமல் யாரையும் தீண்டகில்லேன், ஐம்பொறி அடக்கிய நின்னையும் வடிவால் ஆணென்றுதானே உலகம் கூறும் என்று சீதைமறு மொழிந்த காலை, அநுமனுக்கு எழுந்தது ஒர் ஐயம், இராவணன் தீண்டிக் கொண்டு வந்தானா, இல்லையா என்று. -