பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - - கம்பர் நன்று நன்றிவ் வுலகுடை நாயகன் தன்துணைப்பெருந் தேவி தவத்தொழில் என்று சிந்தை களித்துவந்தேத்தினான் நின்ற சங்கை யிடரொடு நீங்கினான். சங்கை எது? இராவணன் மெய்தொட்டுத் தூக்கி வந்தானா என்பது. இடர் எது? எடுத்துச் செல்லாது இவ்வனத்திலே விட்டுச் சென்றால் சீதையை இராவணன் தீண்டித் தொலைப்படுத்த மாட்டானா? என்பது. இலக்குவன் இயற்றிய சாலையைக் கண்டதும் சங்கை (ஐயம்) நீங்கிற்று. விரும்பாத மாதரைத் தீண்டினால் தலைகள் போய்விடும் என்ற சாபம் இராவணனுக்கு உண்டு என்பதைக் கேட்டதும் இடர் நீங்கிற்று. இராவணன் பிராட்டியின் மேனியைத் தீண்டவில்லை என்பதைக் கருவாக வைத்து ஆக்கிய பாடல்களுக்கிடையே ஒடிக்கிடக்கும் எண்ணவுறவுகளை இதுகாறும் கூறினேன். காப்பியப் பார்வை என்பது பாடற் பார்வை மட்டுமன்று; பாடல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும் தழுவற் பார்வை, இணைந்து செல்விக்கும் எண்ணப் பார்வை. ஒன்றாகக் காண்பதே காட்சி என்றபடி காப்பிய முழுமைக்கும் ஒரு நூலோட்டம் கானும் சங்கிலிப் பார்வை வேண்டும். பிராட்டியைத் தேடிச் சென்ற வானரவீரர்கள் நருமதையாற்றைக் கடந்தனர். அன்னம் ஆடிடங்களையும் அமரப் பெண்கள் ஆடிடங்களையும் வண்டுகள் ஆடிடங்களையும் வழியிடைக் கண்டனர்; எனினும் சீதையை அவர்கள் காணவில்லை என்ற ஒரு கருத்தை எவ்வளவு புதுமையாகப் புலப்படுத்துகின்றார் கம்பர். பாருங்கள்: - . - * - " ... . . . பெறலருந்தெரிவையை நாடும்பெற்றியார் ஆறனறுங் கூந்தலும் அளக வண்டுசூழ் முறுவலும் காண்பரால் முழுதுங் காண்கிலார். நரும்தை யாற்றிடைச் சீதையின் ஒவ்வோர் உறுப்பைக் கண்டனராம் வானரவீரர்கள். அவற்றையும் எப்படிக் கண்டனராம்? கருமணலைச் சீதையின் கூந்தலாகவும், தாமரையை அவள் முகமாகவும், முத்தினை அவள் பல்லாகவும் பார்த்தனராம். இப்பார்வையாற் பயனென்ன? அவள் முழுவுருவத்தையும் பார்த்திலரே என்று முடிக்கின்றார் கம்பர். முழுமை காணவேண்டிய