பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை 41 இடத்துத் தனித்தனி காணுதல் பயனில்லை என்ற உண்மை இவ்வானரப் பார்வையாலும் விளங்குகின்றது அல்லவா? தனிப்பார்வை - தனிப்பார்வை தன்னளவில் கருத்து முற்றிய பாடல்களுக்கே பொருந்தும். அகநானூறு, குறுந்தொகை, நாலடியார் என்றினைய நூல்கள் ஒரு தனிப்பார்வைக்கு உரியவை. வேறுவேறு பொருள்கள்மேல் எழுந்த தனிச்செய்யுட்களாக இருந்தாலும் பாடிய புலவன் ஒரெடுப்பிற் பாடியிருப்பானேல் தொடராத செய்யுட்களுக்கிடையேயும் புலவன்தன் சிந்தனைத் தொடர்பைக் காண முடியும், காணவேண்டும். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், முத்தொள்ளாயிரம் முதலிய பன்னூலின்கண் இத்தொடர்பு உளது. காப்பியம் என்பது ஒரு பெருங்கதை மேல் தோன்றிய இலக்கியத் தொடர்நூல். கதையாலும் யாப்பாலும் கட்டுப்கோப்பாலும் ஒருவன்தன் படைப்பாலும் காப்பியப் பனுவல் என்பது ஒர் உயிரோடும் ஒர் உடம்பாகும். மீண்டும் கூறுகின்றேன்; தவற்றெண்ணம் வரக்கூடாது எபதற்காகக் கூறுகின்றேன். காப்பியங்களில் தனிப்பாடல்களைப் பொறுக்கித் தொகுத்துப் படிப்பதைப் பரப்புவதைப் பதிப்பதை நான் இகழவில்லை. ஒரு தனிப்பாடலின் சொல் நயத்தையோ பொருள் நயத்தையோ ஓசை நயத்தேயோ கண்டு காட்டுவதை நான் இகழவில்லை. பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட மக்களிடை எனைத்தானும் இலக்கியம் பரவேண்டும் என்பது என் விழைவு. அப்போதுதான் மக்கள் வாழ்வில் சிந்தனை வளமும் உணர்ச்சிப் பாய்ச்சலும் இருக்கும். பாடல் எவ்வளவு எனை வகையாற் பரவினும் அதனை இலக்கிய அன்பர்கள் உளங்குளிர வரவேற்பார்கள். மேலும் காப்பியமாவது தொகுத்த பாடல், திரட்டுப் பாடல் இல்லாவிட்டாலும், தனிப்பாடல்களின். தொடர்ச்சிதானே. தனித் தனிச் செய்யுட்களில் ஆழமான நுண்ணிய பயிற்சி இல்லாவிட்டால் சடக்கென முழுக்காட்சி புலப்பட்டு விடுமா? இராமாயணம் சொல்தோறும், தொடர்தோறும், பெயர்தோறும், வினைதோறும் மிக்க சுவை பொதிந்தது. 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்' என்ற பாராட்டு கம்பனுக்கே தகும். சீனித்துளிகளும் இனிக்குமாப் போல் அவன் பாடலின் ஒரு சீரும் கவிச்சுவை தருவது. சுட்டது குரங்குஎரி, சூறையாடிடக் கெட்டது கொடிநகர் என்று இராவணன் நேரா இலங்கைக்கு நேர்ந்த அழிவைக் கொதித்துப் பேசுகின்றான். கேவலம் ஒரு குரங்கு