பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - ಆbui நெருப்பு வைக்க அழிந்தது எது தெரியுமா? ஏதோ ஒரு நகரம் அன்று, தலைநகரம் என்பதைக் காட்டுவதற்காக, கொடி நகர் என்று கூறுகின்றான். நெருப்பு நகரை மட்டுமன்று, உயிர்கொடுத்துக் காக்க வேண்டிய கொடியையும் சேர்த்து எரித்தது என்பது குறிப்பு. இலங்கை எரியூட்டு படலத்தின் முதற் செய்யுளிலேயே 'கொடியையும் பற்றிவிதானம் கொளுத்தி என்று தொடங்குகின்றார் கம்பர். கெட்டது கொடிநகர் என்ற தொடரில் கொடி என்ற ஒருசீர் அடையால் தலைநகர் என்பதனை அறிவிப்பதோடு, கொடியும் கெட்டது என்பதனை அறிவித்து விடுகின்றார் புலவர். இதனால் இராவணனது சீற்றப் பெருக்கத்திற்கு உரிய காரணம் தெளிவாகின்றது. அநுமன் இலங்கையில் வைத்த நெருப்பு செல்லாத இடமெல்லாம் சென்று பரந்து இராவணன் மாளிகையையும் பற்றியது என்று மொழியுமிடத்து, 'ஊரை முற்றுவித்து இராவணன் மனைபுக்கது உயர்தீ என்று பாடுவர் புலவர்; இத்தகைய அழிவெல்லாம் செய்த தீயைக் கொடுந்தீ என்று அடையிட்டுக் கூறாது உயர்தீ என்று கூறினார், அது கற்பு வெளிப்பாடாதலின், -- கோனகர் முழுவதும் நினது கொற்றமும் சானகி யெனும்பெயர் உலகீன் றம்மனை ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர் வானரம் கட்டதென் றுணர்தல் மாட்சியோ. என்று வீடணன் அநுமன் வைத்த தீயைக் கற்புத் தீயாகக் காண்கின்றான். மதுரையை அழித்த தீயை கற்பு உண்ண என்று இளங்கோவும் எடுத்துக் காட்டுவர். 'உயர்தீ’ என்று நெருப்புக்குக் கொடுத்த ஒருசீர் அடையால் கம்பர் கருத்துத் தெளிவாகின்றது. இலங்கை யழிவுகண்டு மனம் கொதித்த இராவணவேந்தன் பலர் கருத்தை அறிய அவை கூட்டுகின்றான். படைத்தலைவர் பலர் கருத்துரை கூறியபின், தம்பி கும்பகருணன் தன் கருத்தை மொழிகின்றான். இவன் அறம் இது என்பது தெரியாதவன் அல்லன். தெரிந்தும் அண்ணன் உறவை விட விரும்பாத குடிப்பற்றுடையவன்; பூசல் குடிக்குள் இருக்கலாமே தவிரப் புறம்படலாகாது என்ற மானமுடையவன்; அண்ணன் உறவை ஒழிக்க விரும்பா விடினும் அவன் செயலை யாரினும் கண்டிக்க முற்படுபவன்; அன்பு,விடாதே அறம் கூறுபவன். ஒவியம் அமைந்தநகர் தீயுண உளைந்தாய் கோவியல் அழிந்ததென வேறொரு குலத்தான் தேவியை நயந்துசிறை வைத்தசெயல் நன்றோ பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ?