பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை - 43 'வனப்புடைய தலைநகர்தீப்பட்டுவிட்டதே என்று வருந்துகின்றாய். அரசநீதியே அழிந்தது என்று சொல்லும் படியாக ஒன்று செய்துவிட்டாயே, அதற்கன்றோ வருத்த வேண்டும். ஒரு மன்னன் இன்னொரு மன்னனைச் சிறைவைக்கலாம், அவன் தேவியைக்கூடச் சிறை வைக்கலாம். பாவமும் பழியும் இல்லை. நீ செய்த செயல் அத்தகையதா? பகைவனின் மனைவியென்று இகல் காரணமாகச் சிறையிட்டிருந்தால் நன்று. நீயோ வேறொரு குலத்தவன் தேவியை 'நயந்து காமத்தால் விரும்பிச் சிறை வைத்துள்ளாய். இதுவே பெரும் பாவம், பெரும்பழி' என்று கூறுகிறான். இத்தனிப் பாடலின்கண் நயந்து என்னும் ஒரு தனிச் சொல் - ஒரு வினையெச்சமே இலக்கிய உயிர்ச்சொல்லாகும். ஒரு சொல்லால் பாத்திரத்தின் உள்ளம் புலனாகின்றது. ஆசில் பரதாரத்தைச் சிறையடைப்பதோ, புகழ்மேல் காதல் கொள்வதோ, மானம் பேசுவதோ குற்றமில்லை. இச்சிறையடைப்பும் புகழ்ப்பற்றும் மானப் பேச்சும் வீரத்தொடு தொடர்பாக இருந்தால் யார்க்கும் அஞ்சத்தானே வேண்டும்? - ஆசில்பராரமவை அஞ்சிறை யடைப்போம் மாசில்புகழ் காதலுறு வேம்வளமை கூரப் பேசுவது மானமிடைபேணுவது காமம். கூசுவது மானிடரை நன்றுநம கொற்றம், என முரண்படக் காரணகாரியங்களை அமைத்து, 'இடை பேணுவது காமம்' என்ற தொடரால், விரும்பியது கடை போகாது என்று இழுப்பான ஒசையால் உணர்ந்துகின்றான் கும்பகருணன். இவ்வாறு தனிப்பாடலை ஆராய்வது வேண்டும். இவ்வாராய்ச்சி முழுப் பார்வைக்கு உய்த்து விடும். கொடிநகர் என்ற சொல்லால் இராவணனது மானப் பெருக்கும், நயந்து என்ற சொல்லால் கும்பகருணனது அற நோக்கும், உயர் தீ என்ற சொல்லால் புலவனது கருத்துரையும் சங்கிலித் தொடரில் ஒரு வளையமாகக் கிடந்து இலங்கக் காண்கின்றோம். எவ்வளவுக்கு எவ்வளவு காப்பியத்தின் ஒர் உறுப்பாக, காப்பிய ஒட்டத்தில் ஒர் அடியாக, காப்பிய மாளிகைக்கண் ஒரு கல்லாகத் தனிப்பாடலைக் காண்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு புலவனது நெடிய சிந்தனைப் படைப்பை நாம் வெளிப்படுத்தியவர்கள் ஆவோம். பொருந்தா நயம் இராமாயணம் நயமலிந்த தனிச் செய்யுட்களால் நிரம்பியது எனினும், அந்நயத்தை முழுமையின் கூறாகக் காண்பது காப்பிய இனிமையாகும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் என்பது