பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கம்பர் கொண்டு இராமாயணத்துக்குக் கண்டபடி சொன்னயம் பார்ப்பது சுவையற்ற ஒரு வழக்காகிவிட்டது. இராமனை நாடு துறந்து காடேகச் சொல்ல வந்த கைகேசி, பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டாண்டின் வாவென் றேவினன் அரசன் என்றாள், என்பது கம்பர் பாடல். பதினான்கு என்று கூறாது ஏழிரண்டு' என்று கூறியதற்குப்பலர் நயஞ்சொல்லக் கேட்டிருப்பீர்கள். வனத்திற்குப் பதினான்கு ஆண்டுகள் போகவேண்டும் என்று மொழிந்தால் பதினான்கு என்ற பெருந்தொகையைக் கேட்டவுடன் இராமன் மறுத்துவிடுவானாம்; குறுந்தொகையர்கத் தோன்றுவதற்காக ஏழிரண்டு என்று கைகேசி மொழிந்தாளாம். இவ்வாறு இத்தொகைச் சொல்லுக்கு ஒரு நயம் உரைப்பர். அது கருத்தாயின் ஈரேழ் என்றல்லவா இன்னும் சுருக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும்? உலகம். எல்லாவற்றையும் பரதனுக்க ஆளக் கொடு; தாழிருஞ் சடைகள் தாங்கு தாங்கவரும் தவமேற்கொள்ளு; பூழி வெங்கானம் நண்ணு; புண்ணியத் துறைகள் ஆடு என்று ஒன்றின் ஒன்று மிகுதியாகக் கேட்கும் இராமன் பதினான்கு என்றால் பயந்தா இருந்து விடுவான்? போக மறுத்தா விடுவான்? மேலும் கைகேசி கூனிசொற்கேட்டுத் தீயவையாவினும் சிறந்த தீயாளாகியபின், ! கணவனுக்கே இரக்கமில்லாத அரக்கியாகியபின், நளினமாகச் சொல்வாள் என்று எதிர் பார்க்கலாமா? வரத்தின் வெறி குடித்த அவளுக்குச் சொன்னெறி யாதும் தெரியாது. தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் எனவும். 'கொன்றுழல் கூற்றம் என்னும் பெயரினிற் கொடுமை பூண்டாள் எனவும் கம்பரே ! , சித்திரித்த பின்னர், அக்கூற்றச்சி வாயிலிருந்து கேட்பவன் மனம் நோவக் கூடாதே என்று 'ஏழிரண்டு என்னும் அடக்கச் சொல் பிறந்தது என்பது பொருத்தமா? கூனியின் சூழ்வினைக்குப்பின் கைகேசியின் நற்குணம் முற்றும் மாறிவிட்டது. 'மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வசை பாராள் எனவும், கேகயத்து அரசன் பெற்ற நஞ்சு' எனவும், கேடு சூழ் மாகயத்தி எனவும் அவள் திரிகுணத்தைப் புலவர் எடுத்துக் காட்டுவர். காணும் நயம் பாத்திரத்தின் குணத்திற்குப் பொருந்த வேண்டும். முழுப் பார்வை பார்ப்பதாற்றான் பொருத்தமோ பொருத்தமின் மையோ தென்படும். இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று இனிய முறையிற் கைகேசி பெய்த சொல்லன்று இது. இன்னா