பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை 45 முறையில் படைக்கப்பட்டவள்மேல் இனிய நயம் ஏற்றுதல் ஆகாது. எண்களைப் பெருக்கல் வாய்பாடாகச் சொல்லுதல் தமிழ் மரபு. 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு (32) பொருளும்", 'நாலிரண்டாகும் (8) பாலுமார் உண்டே' என்று தொல்காப்பியத்தும், 'எண்ணெண்கலையோர் (64) இருபெருவிதியும்', 'எண்ணான்கு இரட்டி(64) இருங்கலை பயின்ற', 'ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை (100) என்று சிலப்பதிகாரத்தும், அருள் வாதவூரருக்குச் செப்பிய நாலெட்டில்(32) தெய்வீகம்', 'மூவிரு முகங்கள் (6) போற்றி எனப் பிறவிடத்தும் இம்மரபுத் தொடர் வருதலைக் காணலாம். ஒரு காப்பியத்தின் தனிப்பாடலுக்கு நயம் காண்பதுகூட முழுமைக்கு ஒத்துவருவதாக இருத்தல் வேண்டும். இவ்விலக்கியத்திறனைக் காட்டுவதற்காகவே இதுகாறும் 'ஏழிரண்டு என்பதன் மேல் வைத்து விளக்கினேன். உலகப்பார்வை காப்பியத்தைக் கற்கும் நாம் அதனை எப்படிக் கற்க வேண்டும்? ஒரு சொல்லுக்கு ஒரு சொல், ஓரடிக்கு ஒரடி, ஒரு செய்யுளுக்கு ஒரு செய்யுள், ஒரு படலத்துக்கு ஒரு படலம், ஒரு காண்டத்துக்கு ஒரு காண்டம் விடாத் தொடர்பு உடையது, கருத்துப் பின்னிக் கிடப்பது. புலமை பிரிக்க வாராதது என்ற முழுப்பார்வ்ையோடு ஒருமைப்பார்வையோடு கற்க வேண்டும். இது காப்பியக் கல்வி முறை. ஆனால் காப்பியம் படைக்கும் புலவன் கண்ட நெறி என்ன? அவன் பார்க்கும் பார்வை என்ன? நாம் காப்பியத்தை முழுமையாகப் பார்க்கின்றோம். அவன் உலகத்தையே காப்பியமாகப் பார்க்கின்றான். உலகமே அவன் காப்பியத்தின் இயக்கமாக நினைக்கின்றான். உலகப் பொருள்களைத் தனித்தனிப் பொருள்கள்ாக அவன் காண்பதில்லை. ஒவ்வொரு பொருளையும் காப்பியத்தின் ஒரு கூறாகப் பாவிக்கின்றான். சுருங்கக் கூறின் புலவனுக்கு உலகம் என்பது காப்பியவுலகமே. - தயரதன் இறந்து கிடக்கின்றான். பரத சத்துருக்கனர் கேகய நாட்டில் பாட்டன் வீட்டில் உள்ளனர். இராம இலக்குவர் வனம் சென்று விட்டனர். கடன் செய்வதற்கு உரிய மக்களில் ஒருவர்கூடப் பக்கத்தில் இல்லை. ஈமக் கடன் செய்வதைத் தள்ளிப் போடலாம். அரசுக்கடன் செய்வதைத் தள்ளிப்போட முடியுமா? அரசில்லாமல் நாடு ஒரு கணமும் ஓடாது. உறங்குமாயினும் மன்னவன் தன் ஒளி கறங்குதெண்டிரைவையகம் காக்கும் என்பர் சிந்தாமணித் தேவர். கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சோழன் இராசாதிராசன் கொப்பைப் போர்க்களத்தே உயிர் துறந்த போது, அங்கேயே அக்கணமே முடிசூடப் பெற்றான் அவன் தம்பி இராசேந்திர தேவன்.