பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கம்பர் ஆட்சி இடையறவின்றி இயங்கிற்று. இந்த அரிய வரலாற்று முறையை, கொப்பையிற் பொரு களத்திலே முடிகவித்தவன் என்று குறிப்பர் பரணிச் செயங்கொண்டார். அமெரிக்கப் பெருநாட்டில் தலைவன் கென்னடியார் சுடப்பட்டு உயிர் நீத்தவுடனே, துணைத் தலைவன் சான்சனார் வானூர்தி தன்னிலேயே அரசத் தலைமை யேற்றதை நம் காலத்தில் கண்டிருக்கிறோம். தலைவன், துணைத்தலைவன் என்ற பதவிகள் அமைப்பது ஏற்றுக்கு? அரசியக்கம் ஒரு கணமும் அற்றுப் போகாது நிகழவேண்டும் என்பதற்காக அன்றோ? ஆதலின் தயரத மன்னன் இறந்த நிலையில் மக்கள் நால்வரும் ஊரில் இல்லா நிலையில்; அயோத்தியாட்சியை யார் இயக்குவது? புலவன்தான் இயக்குவான். புலவனுடைய கற்பனைதான் இயக்க முடியும். இல்லாத நல்லதை இட்டு நிரப்ப வல்லவன் புலவன். மீனி வேல்ை முரசியம்ப விண்ணோர் ஏத்த மண்ணிறைஞ்சத் தூநீர் ஒளிவாள் புடையிலங்கச் சுடர்த்தேர் ஏறித் தோன்றினான் வானே புக்கான் அரும்புதல்வன் மக்கள் அகன்றார் வருமளவும் யானே காப்பன் இவ்வுலகை என்பான் போல எறிகதிரோன். தயரத குலத்துக்கு ஆதித்தன் முதல்வன்; அம்முதல்வன் நிலையானவன். யார் இருப்பினும் இறப்பினும் அவன் தன் குலத்தின் ஆட்சியைச் செய்யமுடியும். ஆதலால் அயோத்தியில் அரசாள்வார் இல்லாமை அறிந்த கதிரோன் கடல் என்னும் முரசு ஒலிக்கக் கதிர் என்னும் வாட்படை ஏந்தித் தேர் ஏறித் தயரதன் மக்கள் வரும் வரை நானே காப்பேன் இக் கோசல நாட்டை என்று புறப்பட்டு வந்தானாம். இவ்வாறு தயரதன் இறந்த அன்று ஞாயிற்றின் உதயம் கம்பருக்கு அரசவுதயமாகத் தோன்றுகின்றது. சுக்கிரீவன் முடிசூடு நாள் வந்துவிட்டது. இராமன் தன் அறிவுடைத் தம்பியைச் சுக்கிரீவனுக்கு முறையால் முடிசூடும்படி ஏவினான். அனுமன் வேண்டுவன எல்லாம் கொணர்ந்தான். அன்று ஞாயிறு வழக்கம்போல் உதயமாகின்றது. காப்பியப் புலவன் உலக ஞாயிற்றைக் காப்பிய ஞாயிறாகவே கருதுவான்; அதனைக் காணும் உலகில் உதிப்பதாகக் கருதான்; தன் கற்பனையுலகில் உதிப்பதாகவே கருதுவான். உலகம் தன் காப்பிய நடக்கைக்கு இருப்பதாகத் தான் அவன் கருத்து. -