பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை 47 புதல்வன் பொன்மகுடம்பொறுத்தலான் முதல்வன் பேருவ கைக்கு முந்துவான் உதவும் பூமகள் சேர வொண்மலர்க் கதவம் செய்ய கரத்தின் நீக்கினான். சுக்கிரீவன் கதிரோன் மைந்தன் அல்லவா? மைந்தன் கிடைத்தற்கரிய முடிசூடுவான் என்றால் முந்திப் பார்க்கும் உவகை தந்தைக்கு இருக்காதா? அதனால் கதிரவன் என் செய்தானாம்? தன் கதிர்க்கரங்களால் தாமரை மலர்களின் இதழாகிய கதவுகளை விரைவாகத் திறந்தானாம். ஏன்? அங்கு வாழும் திருமகள் முடிசூடும் தன்மகனை விரைந்து சேரவேண்டும் என்பது அவன் ஆசை. கதிரவன் உதயத்தை இயற்கைப் போக்கு என்று கருதாது காப்பியத்தின் போக்காகக் காண்கின்றான் புலவன். ஞாயிற்றைக் காப்பியத்தின் ஒரு பாத்திரமாகவே ஆக்கிக் கொள்கின்றான் புலவன். பொன்மானைப் பிடிக்கச் சென்ற இராமனைத் தேடி இலக்குவன் போய்விட்டான். பருனசாலையில் சீதை தனித்துள்ளாள். இதுவே சமயம் என்று கருதிய இராவணன் தவக்கோலம் தாங்கி மெத்தென நடந்து அருந்ததி போலும் சீதை இருந்த பருன சாலையை அடைந்தான். அவள் அழகைக் கண்ணுற்றதும் தனக்கு இருபது கண்கள் போதா எனவும் முக்கோடி வாணாளும் போதுமா எனவும் காமவுள்ளத்துள் கற்பனை செய்தான். துறவுக் கோலத்தைப் பார்த்த சீதை நல்வரவு கூறி இருக்கை நல்கினாள். திரிதண்டத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு இராவணத் துறவி சாலையில் இருந்தபோது, வஞ்சகம் அற்ற சீதைக்கு யாதும் தெரியவில்லை. ஆனால் உலகம் அறியாமையுடையதா? அஃறிணைகளுக்கு நம்போல் உணர்த்தும் ஆற்றல் இல்லாவிட்டாலும் நம்மினும் உணரும் ஆற்றல் உண்டல்லவா? முல்லைக் கொடிகள் பாரியை நாத்தழும்பேறப் பாடவில்லை; தம் வாட்டத்தைப் பாடியுணர்த்தும் வன்மை அவைகட்கில்லை; எனினும் வாட்டம் போக்கும் வள்ளல் பாரி என்பதனை அக்கொடிகள் உணர்ந்து கொண்டன. . நடுங்கின மலைகளும் மரனும் நாவவிந்து அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின படங்குறைந் தொதுங்கின பாம்பும் பாதகக் - கடுந்தொழில் அரக்கனைக் காணுங் கண்ணினே. அரக்கத்துறவியைத் தனித்த சீதைமுன்கண்ட அளவிலேயே அருகில் உள்ள மலைகளும் மரங்களும் என்னாமோ என நடுங்கின. பறவைகள்பகற்பொழுதிலேயே குரல் ஒடுங்கிக் கூட்டில் ஒதுங்கின.