பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கம்பர் அசையாப் பொருள்களும் தம் அருகில் நடக்கும் காப்பிய மாந்தர்களின், நிகழ்ச்சியை எவ்வாறு கருதின கருதிப் பங்கு கொண்டன என்று காப்பிய அகத்திற்கும் உலகப் புறத்திற்கும் தொடர்புபடுத்துகின்றார் கம்பர். இத்தொடரின் அருமை பின்வரும் பாடற்றொடர்பால் விளங்கும். ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டென வேத்திரத்தாசனம் விதியின் நல்கினாள் மாத்திரி தண்டயல் வைத்த வஞ்சனும் பூத்தொடர் சாலையின் இருந்த போழ்தினே. நடுங்கின மலைகளும் மரனும் நாவவிந்து அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின படங்குறைந் தொதுங்கின பாம்பும் பாதகக் கடுந்தொழில் அரக்கனைக் காணுங்கண்ணினே. இருந்தவன் யாவதில் விருக்கை யீங்குறை அருந்தவன் யாவனி யாரை என்றலும் விருந்தினர் இவ்வழி விரகி லாரெனாப் பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள். வந்த துறவியை இருங்கள் என்று சொல்லிச் சீதை இருக்கை யளித்தாள்; அவனும் தண்டத்தை அருகில் வைத்துவிட்டு இருந்தான் என்பது முதற்பாட்டு. இருந்தவன் இச்சாலை யாருடையது? இங்கு வாழ்பவன் யாவன்? நீ யார்? என்று கேட்டான். இவ்விருந்தினர் யாதும் அறியாதவர் என்று கருதிப் பேசத் தொடங்கினாள் சீதை என்பது மூன்றாவது பாட்டின் கருத்து. இவ்விரண்டிற்கும் இடையே இருப்பது நடுங்கின மலைகளும் என்ற பாட்டு. காப்பியத் தன்மை அறியாதார்க்கு இந்நடுப்பாட்டு வேண்டாதது போலவும் இடைப்பிறவரல் போலவும் தோன்றும், பூத்தொடர் சாலையின் இருந்த போழ்தினே' என்று முதற்பாட்டு முடிதலாலும், மூன்றாவது பாட்டு இருந்தவன் யாவது, எனத் தொடங்குதலாலும், நடுப்பாட்டு தொடர்பற்றது போலவும் தோன்றும். நடுப்பாட்டுத்தான் காப்பிய வனப்புப் பாட்டு, கதை காப்பியம் அன்று; கதை நிகழ்ச்சிகள், மாத்திரம் காப்பிய நிகழ்ச்சிகள் அல்ல; கதையில் வரும் மாந்தர்கள் மட்டும் காப்பிய மாந்தர்கள் அல்லர்; கதை கூறும் புலவன் காப்பியப் புலவன் அல்லன். கதை எப்போது காப்பியமாக உருவெடுக்கின்றது எனின், கதையை மையமாக வைத்து உலகத்தை உட்படுத்தும் போது, மாந்தர்களை மையமாக வைத்து மற்றைய உயிர்களைப் பிணைக்கும்போது, கதை மாந்தர்களின் நிகழ்ச்சிகளுக்குச்