பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியப் பார்வை 49 சுற்றுப்புறங்களைத் தொடுக்கும் போது, சுருங்கக் கூறின் கதையை உலகமயம் ஆக்கும்போது காப்பியத் தன்மை ஏறுகின்றது. பால காண்டமும் அயோத்தியா காண்டமும் அயோத்தியா காண்டமே கதையின் உண்மையான துவக்கம் என்பர் வ.வெ.சு. ஆனால் கதைத்துவக்கம் வேறு; காப்பியத்துவக்கம் வேறு. க்ாப்பியத்துள் அடங்குவது கதை. கதை என்பது ஒரு முளை, அவ்வளவே; அம்முளை தோன்றுவதற்கு என்னென்னவோ இயற்கைச் சூழ்நிலைகள் வேண்டும். அம்முளை வளர்ந்து பருத்துச் செடியாகி மரமாகிக் காயும் கனியும் பயக்கலாம். அவ்வளர்ச்சிக்கு உலக ஐம்பூதத்தின் துணையும் வேண்டு மல்லவா? உலகச் சூழலே காப்பியம் ஆம். அச்சூழ்நிலையை விரித்து எழுதுபவன் காப்பியன். எவ்வளவு விரித்து எழுதுவது என்பது கதையின் ஒட்டத்தையும் கற்பனையளவையும் பொறுத்தது. கீரை விதைப்பவன் பெருங்குழி தோண்டான், நீர் விசை வைத்துத் தண்ணிர் பாய்ச்சான். - } அயோத்தியா காண்டம் கதை, பாலகாண்டம் காப்பியம். இங்ங்னம் பெரும்பாலும் கருதவேண்டும். முடிசூட வந்த இராமன் வனம் செல்கின்றான் என்பது கேட்ட அயோத்தி நகர மாந்தர்களின் பல்வேறு அவலங்களைப் பாடுகின்றார் கம்பர். அவர்கள் வாய்விட்டு அழுத பேரோசை விண்ணை முட்டியது. மண் செய்த பாவம், பெண் செய்த பாவம், கண் செய்த பாவம் என்று சொல்லி அழுகின்றனர். பரதன் ஆளான், அவன் ஆளா விட்டாலும் இராமன் இனி மீளான், இன்னும் நாம் மாளாதிருக்கின்றோம் என்று பன்னிப் புலம்புகின்றனர். - - . பெற்றுடைய மண்ணவ ளுக்கீந்து பிறந்துலகம் முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்தீண்டி உற்றுறை தும்யாரும் உறையவே சின்னாளில் புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போமென்பார். கேவலம் இம்மண்ணைக் கைகேசிஆளட்டும். உலக அரசன் பின்னே நாம் சென்று விடுவோம். போய்விட்டால், இந்நாடு காடாகும்; அவன் சென்ற காடு நாடாகும் என்று அயோத்தியர் புலம்பிச் சொல்லிய அளவில் நிற்கவில்லை; இராமன் கூடவே புறப்படவும் செய்தனர். இராமன் செலவு கண்ட சிலர் மாரடைப்பினால் மாண்டனராம்; துயர மிகுதியால் சிலர் அழுவதுகூடத் தெரியாது அசை வற்று இருந்தனராம்; சிலர் தம் கண்களைப் பெயர்த்துக் கொண்டனராம்; சிலர் மென்துகிலைக் களைந்தெறியச் சிற்றாடை க.டி *