பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - - கம்பர் புனைந்தனராம்; மாந்தர்களின் கண் மழையால் தெருத்தூசி அடங்கியதாம். - ஏவிய குருசில்பின் யாவர் ஏகிலார் மாவியல் தானையம் மன்னை நீங்கலாத் தேவியர் ஒழிந்தனர் தெய்வ மாநகர் ஒவியம் ஒழிந்தன உயிரிலா மையால். இராமன் பின் செல்லாதார் யார் என்று கணக்கெடுக்கின்றார் கம்பர். தயரதன் மனைவியர் செல்லவில்லை, வாடும் கணவனை விட்டுச் செல்வது கூடாதென்பதற்காக. ஒவியங்கள் உடன் செல்ல முடியவில்லை. ஏன்? அவற்றுக்கு உயிர் இல்லை. உயிருடைய எல்லாம் இராமன் பின் சென்றன எனவும் குடும்பம் குடும்பமாகக் கணவன் மனைவியெல்லாம் சென்றனர் எனவும் பரந்துபட விரிக்கின்றார் கம்பர். இப்பிரிவு பொருந்துமா? மிகையில்லையா? இராமன்பால் இப்பேரன்பு எல்லாக் குடிமக்கட்கும் எங்ங்னம் எழுந்தது? எவ்வளவு காலமாக எழுந்தது? அகப்பையில் வரவேண்டுமென்றால் சட்டியில் இருக்க வேண்டுமல்லவா? திருமணத்துக்கு ஒரழைப்புக் கொடுத்து விட்டுச் சாவில் ஆயிரம் இரங்கற் கடிதங்கள் எதிர்பார்க்கலாமா? இராமன்பால் அயோத்தி மக்கள் கொண்ட காதலை விரித்துரைப்பது பாலகாண்டம். அங்ங்ணம் அவர்கள் காதல் கொள்ளுமாறு அவன் எளிமையாக நடந்து கொண்டதை எடுத்துக் காட்டுவது பாலகாண்டம். எதிர்வரும் அவர்களை எமையுடை யிறைவன் முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா எதுவினை இடரிலை இனிதின் நுமனையும் மதிதரு குமரரும் வலியர்கொல் எனவே. அஃதைய நினையெம தரசென வுடையேம் இஃதொரு பொருளல எமதுயிர் உடனேழ் மகிதல முழுதையும் உறுகவி மலரோன் உகுபகல் அளவென உரைநளிை புரிவார். இவ்வாறு இராமனுக்கும் நகர மாந்தர்களுக்கும் நடந்த நல்லுரையாடலைப் பாலகாண்டத்தில் திருவவதாரப் படலத்தில் கற்கின்றோம். இராமன் சிறு பருவத்தனாயினும் தன் குடிகளைப் பார்க்கும்போதெல்லாம் மலர்ந்த முகத்தோடு தானே முற்பட்டு உங்கட்கு யாதும் குறைவில்லையே, குடும்பம் நலந்தானே, குழந்தைகள் வளந்தானே என்று உசாவினனாம். உன்னை