பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 沁 கம்பர் தலைப்புகள் என் மூன்று நாள் தலைப்புகள் பொதுமையாகவும் இருக்கவேண்டும், புதுமையாகவும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இராம காதையை ஆசைபற்றி அறையலுற்றேன் என்றார் கம்பர். அந்த ஆசைக் கம்பரை நானும் ஆசைபற்றி அறையலுற்றேன். பாத்திரங்கள் பற்றியோ, வருணனை பற்றியோ, உவமைகள் பற்றியோ, ஒசை நயங்கள் பற்றியோ, சொல் விழுக்காடு பற்றியோ தனிக் கூறாகப் பேசுவதிலும், காப்பியம் என்பது பற்றிப் பல கூறாக மொழியலாமே என்ற சிந்தனை ஒடிற்று. ஒரு வாரத்திற்கு முன்தான் தலைப்புகள் உருவாயின. கடலைச் சிறு வாய்க்கால் ஆகவும், மலையைக் கற்குவியல் ஆகவும், மாளிகையைக் குடிசையாகவும், பெருஞ்சாலையை ஒற்றையடிப் பாதை ஆகவும் கருதலாமா? இராமாயணக் காப்பியத்தைத் தனிப் பாடல் தொகுதி போல் கருதலாமா? கருதும் பழக்கம் புலவர்களிடையேயும் பெருகிவிட்டதே. இதனைத் தடைசெய்யும் தலைப்புகளில் பேசவேண்டும்; அத்தலைப்புக்களில் இத்தமிழ்ப்பெரும் பல்கலைக்கழகத்தில் பேசினால், இராமாயணம் காப்பியமாகப் பரவும் என்று அவாக் கொண்டேன். அதனாற்றான் காப்பியப் பார்வை, காப்பியக் களம், காப்பிய நேர்மை என மூன்று தலைப்புக்களையும் காப்பியத் தொடர்பாக மேற்கொண்டேன். தலைப்புகள் மூன்றாக இருந்தாலும் மூன்றிலும் ஊடுருவிச் செல்லும் பார்வை நேற்று நாம் பார்த்த முழுப் பார்வையேயாகும். நேற்றைக்கு இன்று முரணாக, இன்றைக்கு நாளை முரணாக நம் பார்வை இராது. - . தனிப்பார்வை காப்பியத்துக்குப் பார்க்கக்கூடாது என்பதில்லை. அப்பார்வையினால் கவிதையின் சில நலங்கள் வெளிப்படுமேயன்றிக் காப்பிய வனப்புகள் வெளிப்படா. எது முதன்மை அது தோன்றாது. எது முழுமை அது தோன்றாது. முதன்மையும் முழுமையும் காணவேண்டின், கம்பரது சிந்தனையின் முழுவுருவம் காணவேண்டின், ஞாலத்தையே அடக்கிக் காப்பியம் செய்த அவரது புலமையின் திசையைக் காண வேண்டின், இராமாயணத்தின் பல பாடல்களில், பல படலங்களில், பல காண்டங்களில் குருதியோட்டம் போலச் சிந்தனை ஒட்டம் வேண்டும். எவ்வளவுக்குப் பாடல்களை இணைத்து இரண்டறக் கலந்து உடம்பின் நரம்புபோல் பிணைத்துப் பார்க்கின்றோமோ, அவ்வளவுக்குக் காப்பியமாகப் பார்க்கின்றவர்கள் ஆவோம்.