பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 57 முன்னைக் காப்பியங்கள் இராமாயணம் உலகக் காப்பியங்களுள் சிறந்தது. தலையாயது என்றுகூடச் சிலர் உரைப்பர். நாம் அவ்வளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. பல தமிழ்க் காப்பியங்களுக்குப் பின் தோன்றியது இராமாயணம். அதனால் முன்னைக் காப்பியங்களில் உள்ள நல்ல நல்ல கூறுகளைக் கம்பர் தழுவிக் கொண்டார் என்று சொன்னால், அது குறைவன்று. முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் சொல்லும் பொன்னே போற் போற்றுதல் என்ற நெறி இலக்கணத்துக்குக் கூறப்பட்டதாயினும் இலக்கியத்துக்கும் கொள்ளலாம். பின் எழுந்த இராமாயணம் முன்னெழுந்த காப்பியங்களின் சில வனப்புக்களை அழுத்தமாகத் தழுவிக் கொண்டுள்ளது. சீதை இல்லம் விட்டு இராமனுடன் காடேகும் போதும், பகைவன் நாட்டில் துணிந்து பேசும்போதும் சிலப்பதிகார அமைப்பு படியக் காண்கின்றோம். நாட்டு நகர வருணனைகளில் சீவக சிந்தாமணியின் கற்பனைகள் கலந்துள. அநுமன் இராமனை முதற்கண் கண்ட காலை எழுந்த அன்பு உணர்ச்சியைக் கம்பர் பாடும்போது பெரியபுராணத் தோற்றம் படுகின்றது. குடுமித் தேவரைக் கண்ணப்பர் கண்டபோது அன்பு மயமாகவே ஆகிவிட்டார். மராமரப் படலத்தையும் கண்ணப்ப நாயனார் புராணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். , - கண்ணப்ப்ர் - முன்புசெய்தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல் கூர - வள்ளலார் மலையை நோக்கி என்புநெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கையோடும். அநுமன் துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை தன்னை நீக்கித் தென்புலத்தன்றி மீளா நெறியுய்க்கும் தேவ ரோதாம் என்யெனக் குருகுகின்ற திவர்கின்ற தளவில் காதல் அன்பினுக்கவதியில்லை அடைவென்கொல் அறிதல் தேற்றேன்.